காங்கிரஸ் நாடாளுமன்ற குழு பொறுப்பாளர்கள் நியமனம்

காங்கிரஸ் நாடாளுமன்ற குழுவின் அலுவலக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி எம்.பி., விஜய் வசந்த் பொருளாளராகவும், செயலாளர்களாக எம்.பி.,க்கள் ரஞ்சீத் ரஞ்சன் (மாநிலங்களவை), எம்.கே.ராகவன் (மக்களவை), அமர் சிங் (மக்களவை) ஆகியோரை நியமித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்காக எம்.பி., விஜய் வசந்த், காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்!

சுகாதாரத்துறைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக மாற்றம் வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு சுகாதாரத்துறைக்கு மாற்றம் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார் வனத்துறைக்கு மாற்றம்