டேட்டிங் செல்ல ஊதியத்துடன் விடுப்பு அறிவித்த நிறுவனம்

தாய்லாந்தைச் சேர்ந்த ஒயிட்லைன் குரூப் என்ற மார்கெட்டிங் நிறுவனம், தங்களின் ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு (Tinder Leave) வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை 6 மாதங்களுக்கு இந்த டிண்டர் விடுப்பைப் பயன்படுத்தி ஊழியர்கள் டேட்டிங் செய்யலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது காதலனுடன் வெளியே செல்ல நேரமில்லை என அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண் கூறியதை அடுத்து, இந்த முடிவை அறிவித்துள்ளது.
வாங்க, வந்து ஒரு வாய் சாப்பிட்டுப் போங்க” – தமிழக காங்கிரஸை கிண்டலடித்த பாஜக தலைவர் அண்ணாமலை!

பிரதமரை கண்டித்து தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும் , உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். மேலும், வரும் அனைவருக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். எப்படி திமுகவும் காங்கிரஸும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய […]
ஜி20 மாநாடு – டெல்லியில் விடுமுறை

டெல்லியில் ஜி20 மாநாட்டை முன்னிட்டு செப். 8 முதல் செப். 10 வரை விடுமுறை அறிவிப்பு. அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு.
செம்பாக்கம் மண்டலம் அலுவலகத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் அலுவலக கட்டடம்

தாம்பரம் மாநகராட்சி, செம்பாக்கம் மண்டலம் அலுவலகத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் அலுவலக கட்டடத்தினை திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, மண்டலக்குழு தலைவர்கள், ச.ஜெயபிரதீப், தூ.காமராஜ், சு.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.