சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை 2025 ஜனவரி 14ம் தேதி நடைபெறும். 2024ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 26ம் தேதி நடை சாத்தப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி கோயில் நடை அடைக்கப்படும்.
நவ.07ல் தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ. 7ல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு.