நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

கூடலூரை அடுத்த தேவர் சோலையில் கடந்த 2 வாரங்களாக காயத்துடன் சிறுத்தை ஒன்று சுற்றி திரிந்தது.

நீலகிரி மாவட்டத்தில் 126வது மலர் கண்காட்சி நடைபெறவுள்ளதால் வரும் 10ம் தேதியன்று மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவு

இதனை ஈடு செய்ய 18ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

உதகை மலர் கண்காட்சி – ரூ.150 கட்டணம் நிர்ணயம்

நீலகிரி: உதகை தாவரவியல் பூங்காவில் மே 10 முதல் 20ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மலர் கண்காட்சியில் சிறியவர்களுக்கு (6-12 வயது) ரூ.75, பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணம் நிர்ணயம். இந்தாண்டு மலர் கண்காட்சியில் 6.5 லட்சம் மலர்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன – நீலகிரி ஆட்சியர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கடந்த 16ம் தேதி கால்கள் வெட்டப்பட்ட நிலையில், சுருக்கு கம்பியில் சிக்கி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சிறுத்தை

இவ்விவகாரம் தொடர்பாக மேல் தட்டப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான தினேஷ் மற்றும் சங்கர் ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து வேட்டைக்கு பயன்படுத்தும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கேரட் பயிரிடப்படுகிறது

அறுவடை செய்யப்பட்ட கேரட்களை மூட்டைகளாக கட்டி, கேரட் கழுவும் இயந்திரங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இயந்திரங்களில் முழுமையாக கழுவிய பின், சுத்தம் செய்யப்பட்ட கேரட் மூட்டைகளாக கட்டப்பட்டு, லாரிகளில் ஏற்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் உதகை அருகே உள்ள முள்ளிக்கொரை பகுதியில் கேரட் கழுவும் இயந்திரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தம்பா (வயது 35) பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் தம்பாவின் தலை மற்றும் கை […]

“நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீலகிரி வருவதை தவிர்க்க வேண்டும்”

சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் மேட்டுப்பாளையம் – கோத்தகிரி, மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதைகளில் நிலச்சரிவு கோவையில் இருந்து 2 தமிழக பேரிடர் மீட்பு படை வர உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல் “அதிக நிலச்சரிவு கோவை மாவட்ட எல்லையில் நிகழ்ந்து உள்ளது”

நீலகிரி மாவட்டம் முழுவதும் இஎஸ்ஐ திட்டம் அமல்: மண்டல துணை இயக்குநர் தகவல்

கோவை: நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று (நவ.1) முதல் இஎஸ்ஐ திட்டம் அமலாவதாக கோவை இஎஸ்ஐசி சார் மண்டல அலுவலகத்தின் துணை இயக்குநர் (பொறுப்பு) கே.ஆர்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: காப்பீடு செய்யப்பட்ட நபர்கள், அவர்களைச் சார்ந்தோருக்கு மருத்துவப் பயன்கள் மற்றும் நோய் கால பயன், பேறுகால உதவி, தற்காலிக அல்லது நிரந்தர ஊன பயன், சார்ந்தோர் உதவி பயன்கள் வழங்குவதே இஎஸ்ஐ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பத்து அல்லது அதற்கும் […]