இருளில் மூழ்கிய சென்னை

திருவள்ளூர் அருகே துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறால் சென்னையில் நேற்று இரவு பல இடங்களில் மின் விநியோகம் பாதிப்பு. அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, தியாகராய நகர், சூளைமேடு, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், பெரம்பூர், அடையாறு, மந்தைவெளி, வளசரவாக்கம், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் நள்ளிரவு 2 மணி வரை மின்வெட்டு ஏற்பட்டது. மின் வெட்டை கண்டித்து சில இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரவு நேர பாடசாலையை தொடங்க நடிகர் விஜய் முடிவு

காமராஜர் பிறந்தநாளில் (ஜூலை 15 ) 234 தொகுதிகளிலும் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், இரவு நேர பாடசாலையை விஜய் மக்கள் இயக்கம் தொடங்குகிறது; விழியகம், குருதியகம், விருந்தகத்தை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இரவு நேர பாடசாலையை தொடங்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்