சென்னை, குமரியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சென்னை, தாம்பரம், புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை. பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் சோதனை.
தமிழகத்தில் தஞ்சை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ சோதனை. ராமலிங்கம் வழக்கில் என்.ஐ.ஏ இதுவரை 13 நபர்களை கைது செய்துள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் 5 நபர்களை தேடப்படும் குற்றவாளியாக என்.ஐ.ஏ அறிவித்தது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக என்.ஐ.ஏ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை

காலிஸ்தான் தீவிரவாத அமைப்பிடம் இருந்து 2014 முதல் 2022-ம் ஆண்டு வரை ஆம் ஆத்மி கட்சி ரூ.134 கோடி பணம் பெற்றதாக குற்றம்சாட்டி, என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரை. உலக இந்து கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் அஸ்ஸூ மோங்கியா அளித்த புகாரில் துணைநிலை ஆளுநர் உத்தரவு. பதவியில் உள்ள முதலமைச்சர் மீது என்.ஐ.ஏ. விசாரணைக்கு பரிந்துரைப்பது இதுவே முதல்முறையாகும்.
என்.ஐ.ஏ. சோதனை – ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

கோவை கார் வெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. 30 செல்போன்கள், 25க்கும் மேற்பட்ட ஆவணங்கள், 6 ஹார்ட் டிஸ்க்குகள், 20க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.
தமிழகத்தில் பா.ஜ.க.வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. சோதனை
தேர்தல் சமயத்தில் என்னையும் கட்சியையும் முடக்க பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது – சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு பிப்.5ல் என்.ஐ.ஏ. விசாரணைக்கு கட்சியினருடன் ஆஜராகப் போவதாக சீமான் அறிவிப்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் தன்னிடம் தான் விசாரணை செய்திருக்க வேண்டும் எனவும் சீமான் கருத்து விடுதலை புலிகள் அமைப்பு எங்கு இருக்கிறது? – அவர்களுக்கு நாங்கள் எப்படி பணம் வசூலிக்க முடியும்? என்றும் சீமான் கேள்வி என்.ஐ.ஏ. சோதனை – நேரில் ஆஜராக சீமான் முடிவு
தமிழகத்தில் என்.ஐ.ஏ. சோதனை – பின்னணி
தமிழகத்தில் கோவை, திருச்சி, தென்காசி உள்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. லண்டனில் உள்ள விடுதலை புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர் உடன் தொடர்பில் இருந்த நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வழக்கில் விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ. சோதனை பிரத்யேக செயலி மூலம் தொடர்பில் இருந்தது என்.ஐ.ஏ கண்களில் சிக்கியதால் சோதனை என தகவல்
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே முகமது தாஜுதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே முகமது தாஜுதீன் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.போலி ஆவணங்களை அளித்து பாஸ்போர்ட் வாங்கிய விவகாரத்தில் சோதனை நடந்து வருவதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை காஜிமார் தெருவில் உள்ள முகமது தாஜிதின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

முகமது தாஜிதின் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது சகோதரர் உஸ்மான்காலித் வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை. ஹைதராபாத், லக்னோ வெடிகுண்டு தாக்குதல், போலி பாஸ்போர்ட் குறித்தும் விசாரணை!