புதிய பாம்பன் ரயில் பாலத்தில் ஆய்வு தொடங்கியது!

இதன் ஒரு பகுதியாக இன்று இரண்டாவது முறையாக பாலம் தூக்கி இறக்கப்பட்டது.
பாம்பன் புதிய ரயில் பாலம்: பணிகள் அனைத்தும் ஓவர்… விரைவில் திறப்பு விழா!
ராமேசுவரம் பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், விரைவில் இதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் ரயில்வே அமைச்சகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. பாம்பன் ரயில் பாலம் 1914ம் ஆண்டு கட்டப்பட்டது. தொழில்நுட்ப பிரச்சினை, தூக்குப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் பழைய ரயில் பாலம் அருகே புதிய ரயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, 2019 மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் விவரம்👇🏻

கோவி.செழியன் – உயர்கல்வித்துறை. செந்தில் பாலாஜியும் – மின்சாரத்துறை. நாசர் – சிறுபான்மையினர் நலத்துறை. ராஜேந்திரன் – சுற்றுலா சுற்றுலாத்துறை
மேலும் 10 புதிய வந்தே பாரத் ரயில்கள்.!

நாட்டில் விரைவில் 10 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதிவேக ரயில்களான வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் இயக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வருகிற செப். 15ம் தேதி 10 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஜார்கண்ட் மாநிலத்தில் புதிய ரயில்களின் துவக்க விழா நடைபெற இருக்கிறது. வாரணாசி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வந்தே பாரத் ரயில்வே இயக்கப்பட உள்ளன.
வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
புதிய கமிஷனர் பதவியேற்பு

புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி கமிஷனர் பாலசந்தருக்கு மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி துணை மேயர் கோ. காமராஜ் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தாம்பரம் மாநகராட்சி புதிய கமிஷனர் பதவி ஏற்பு

தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய கமிஷனர் பதவியேற்பு மேயர் துணை மேயர் வாழ்த்து தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக பணிபுரிந்து அழகுமீனா பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக பணி மாற்றம் செய்யப்பட்டார். சேலம் மாநகராட்சி கமிஷனர் ஆக பதவி வகித்த பாலசந்தர் தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக பணி மாற்றம் செய்யப்பட்டார். இன்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் புதிய கமிஷனர் பாலச்சந்தர் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற மாநகராட்சி கமிஷனர் பாலசந்தருக்கு மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி துணை மேயர் கோ. […]
மேடவாக்கத்தில் புதிய காவல் நிலையம் திறப்பு

தாம்பரம் மாநகர காவல் எல்லையில் மேடவாக்கம் புதிய காவல் நிலையத்தை தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் திறந்து வைத்தார். தாம்பரம் மாநகர காவல் எல்லை துவங்கப்பட்ட போது 20 காவல் நிலையங்கள் இருந்தது. அதன் பிறகு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு கிளாம்பாக்கம் காவல் நிலையம் புதிதாக திறக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக பள்ளிகரணை காவல் நிலையத்தை பிரித்து மேடவாக்கம் காவல் நிலையம் உருவாக்கப்பட்டு கோவிலம்பாக்கத்தில் மேடவாக்கம் காவல் நிலையத்தை தாம்பரம் […]
தாம்பரம் மாநகராட்சி புதிய ஆணையாளர் திரு.S.பாலச்சந்தர் இ.ஆ.ப., அவர்கள்
புதியதாக 2 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடக்கம்

புதியதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக புதிதாக ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது எனவும் தேர்தல் முடிந்த நிலையில் தற்போது புதிதாக ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளதாகவும், புதிதாக ரேஷன் அட்டை கோரி இதுவரை சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் எனவும் உணவுப்பொருள் வழங்கல்துறை தெரிவித்துள்ளது.