ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது; நிச்சயம் விலைகொடுக்கும் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு கேபினெட் கூட்டம் ஜெருசலேமில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசிய போது: இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரான் விலை கொடுக்கும். ஈரானின் தாக்குதல் தோல்வியடைந்துவிட்டது என்றார்.