நெல்லை மேயர் சரவணனுடன் அமைச்சர் ஆலோசனை!

சர்ச்சை, உட்கட்சி பூசல் முற்றிய நிலையில் நெல்லை மேயர் சரவணனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், நெல்லை மேயர், துணை மேயர், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நெல்லை அருகே இளைஞர் வெட்டிக்கொலை; 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே யாக்கோபுரம் பேருந்து நிலையத்தில் செல்வன் (35) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். செல்வன் கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை பாளையங்கோட்டையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது

கரூர் பரமத்தி 103.1, ஈரோடு 100.4, வேலூரில் 99.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

ஆகஸ்ட் 6 முதல் நெல்லைக்கு வந்தே பாரத் ரயில்

நாடு முழுவதும் அதிக வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடியே இந்த ரயிலை தொடங்கி வைத்து வருகிறார். இது பகல் நேர ரயில் ஆகும்:தற்போது சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் 6-ந் தேதியே இந்த ரயில் விடப்படும் என்றும் இதனை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்றும் தெரிகிறது. இதனை தெற்கு ரயில்வே அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினர். இதற்கிடையே வந்தே பாரத் […]

நெல்லையில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் மகன் ஸ்ரீநயினார் பாலாஜி, மோசடியாகப் பதியப்பட்ட ₹100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து!

ஸ்ரீநயினார் பாலாஜி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்த நிலையில், மண்டல துணை பத்திரப்பதிவு துறைத் தலைவர் அதிரடி நடவடிக்கை!