போத்தீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை:

சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள புகழ்பெற்ற போத்தீஸ் ஜவுளிக்கடை நிறுவனத்துக்குச் சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போத்தீஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான போத்தி ராஜா மற்றும் அசோக் ஆகியோரின் இல்லங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை […]

நெல்லை சாந்தி அல்வாவில் தேள்

நெல்லையில் உள்ள பிரபல சாந்தி அல்வா கடையின் அல்வாவில் தேள் இருந்ததாக வாடிக்கையாளர் புகார் தெரிவித்தார். இதன் காரணமாக கடை, குடோனில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் தேள் இருந்தது குறித்து விளக்கம் கேட்டுகடை உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.