குரோம்பேட்டையில் செல்வசேகர் உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி ……

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாததால் மகன் ஜெகதீஸ்வரன் உயிரை மாய்த்து கொண்ட நிலையில், மகனை இழந்த செல்வசேகர் நேற்று உயிரை மாய்த்து கொண்ட செய்தி அறிந்து குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்வசேகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நீட் தேர்வு???? – மருத்துவ மாணவரின் உலுக்கும் கேள்விகள்!

சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் நண்பர் ஃபயாஸ்தின் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா?

நீட் தேர்வில் அடுத்தடுத்து தோல்வி; உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்-விரக்தியில் தந்தையும் விபரீத முடிவு

சென்னை சேர்ந்த 19 வயது மாணவர் நீட் தேர்வில் 2 முறை ஏற்பட்ட தோல்வியை தாங்க முடியாமல் தனது உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மருத்துவ படிப்பு படிக்கவேண்டும் என்றால் நீட் தேர்வை கட்டாயம் எழுதி தேர்ச்சிப் பெற வேண்டும். நீட் தேர்வு என்பது தேசிய தேர்வு முகமை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தபட்டு வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் தொடங்கி பாமர மக்கள் வரை […]

நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள் அவரது தந்தையும் தூக்குப் போட்டு தற்கொலை……

குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன்,19 என்ற மாணவர், நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதற்காக தனியார் நீட் கோச்சிங் சென்டருக்கும் அவர் சென்று படித்துள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வு எழுதியும் அவர் தோல்வி அடைந்தார். தொடர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தன்னால் இனி மருத்துவரே ஆக முடியாது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியில் இருந்த மாணவன் ஜெகதீஸ்வரன், சனிக்கிழமையன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் தொடர் […]