நீட் விலக்கு – திருமாவளவன் கையெழுத்திட்டார்

திமுக சார்பில் நீட் விலக்கு கோரும் கையெழுத்து இயக்கத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டார். சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்திற்கு சென்று திருமாவளவனிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். அனைத்து இயக்கத்தினரையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன். இதுவரை 10 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்டுள்ளனர். 50 லட்சம் கையெழுத்து பிரதிகளை குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் மாலை நேர நீட் பயிற்சி – தொழிற்கல்வி இணை இயக்குனர்

மாலை 4 மணிமுதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க உத்தரவு. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பயிற்சி அளிக்க திட்டம். ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி – யாரையும் கட்டாயப்படுத்த கூடாது.
‘நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமையுள்ளது’ – சென்னை உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கட்சிகளுக்கு உரிமை உள்ளது. திமுகவின் நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தால் என்ன பாதிப்பு?- பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி திமுக கையெழுத்து வாங்குவதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி. உண்மைத்தன்மையை நிரூபிக்க ரூ.1 லட்சம் டெபாசிட் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கூறியதால், மனுவை வாபஸ் பெற்றார் மனுதாரர்.
நீட் விலக்கு கோரி தாம்பரத்தில் கையெழுத்து இயக்கம்

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி கிழக்கு தாம்பரத்தில் கையெழுத்து இயக்கம்,காஞ்சி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி மாணவரணி மருத்துவர் அணி சார்பில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர கழக துணைச் செயலாளர் பொன் சதாசிவம், அமைப்புசாரா ஓட்டுனர் அணியின் மாவட்ட அமைப்பாளர் தாம்பரம் நாராயணன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் இன்ஜினியர் ராமமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை அணி துணை தலைவர் ஷாஜகான், மாவட்ட மகளிர் தொண்டரணி துணை […]
தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு, மேலும் தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காத்திட வேண்டும்”

சென்னை விமான நிலையத்தில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
நீட் என்றால் பூஜ்ஜியம்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் மதிப்பெண் தேவையில்லை என்ற உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் தோ்வில் பங்கேற்றிருந்தால் போதுமானது என்றும், தகுதி மதிப்பெண் எதுவும் தேவையில்லை என்றும் மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. இதனை விமர்சித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர்(எக்ஸ்) செய்தி: “நீட் தேர்வின் பலன் என்ன என்றால் பூஜ்ஜியம் தான் என்பதை மத்திய பா.ஜ.க. அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. முதுநிலை […]
2016ஆம் ஆண்டு 50 சதம் மதிப்பெண் எடுத்தால் தான் பட்ட மேற்படிப்பு செல்ல முடியும்

அன்று பட்ட மேற்படிப்பு தேர்வு எழுதிய மருத்துவர்களில் பெரும்பாண்மையானவர்கள் 50 சதவீதத்திற்கும் மேல் ம்திப்பெண் எடுத்தாதால் இந்த விதியால் பிரச்சனை இல்லை. ஆனால்இம்முறை பட்ட மேற்படிப்பு தேர்வு எழுதியவர்களில் பலரும் 0 அல்லது அதற்கும் குறைவாகவே மதிப்பெண் எடுத்துள்ளார்கள். எனவே பட்ட மேற்படிப்பு நுழைவு தேர்வில் 50 சதம் மதிப்பெண் எடுத்தால் தான் பட்ட மேற்படிப்பு செல்ல முடியும் என்றால் இவர்களால் பட்ட மேற்படிப்பு படிக்க முடியாது. எனவேஇவர்களுக்காக, 0 மதிப்பெண் எடுத்தாலும், ஏன் அதற்கு கீழ் […]
ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் சேரலாம்..! நீட் பிஜி தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

டெல்லி: நீட் பிஜி தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி, நீட் பிஜி தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம். அதாவது, மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு அறிவிப்பு மூலம் நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் ஜீரோவாக எடுத்திருந்தாலும், எம்.டி, எம். எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில், 3-ஆவது […]
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது

நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. மதுரை அண்ணாநகரில் அம்பிகா திரையரங்கம் அருகே திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைச்சர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் தளபதி, திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
நீட் தேர்வு இனி நிறுத்துவதற்கு வாய்ப்புகள் இல்லை

‘நீட்’ தேர்வை ஏற்றுக்கொண்டு, தமிழக மாணவர்கள் முன்னிலை பெற்று வரும் நிலையில், மாணவர்களும், பெற்றோரும் போலி பரப்புரைகளையும், வாக்குறுதிகளையும் நம்பவேண்டாம். ‘நீட்’ தேர்வை நிறுத்துவதற்கு இனி வாய்ப்பில்லை என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் தெளிவுபடுத்தியுள்ளார். அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், கல்வியாளர் பாலகுருசாமி கூறியுள்ளதாவது: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர தேசிய திறனறி முகமை, ‘நீட்’ தேர்வை நடத்துகிறது. நுழைவுத்தேர்வு அவசியம் என உச்சநீதிமன்றமும், தேசிய மருத்துவ ஆணையமும் அறிவித்துவிட்டதால், இனிமேல் ‘நீட்’ […]