நீட் தேர்வு திடுக்கிடும் தகவல்

எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற 72,194 பேரில் 48,954 பேர் இரண்டு ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு மேல் பயிற்சி பெற்றவர்கள் என்ற விவரம் அம்பலமாகி இருக்கிறது.7.5% ஒதுக்கீட்டில் சேரும் பெரும்பாலோர் இரண்டாவது முறை எழுதியோர் அதிகம். முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் ஒருமுறைக்கு மேல் எழுதியவர்கள்தான்.லட்சக்கணக்கில் செலவு செய்து தனியார் கோச்சிங் மையங்களில் படிக்காமல் நீட்டில் வெல்வது கடினம். கல்வியில் சமமற்ற போட்டியை உருவாக்கும்நீட், ஏழைகள், பெண்கள், ஊரக, முதல் தலைமுறை மாணவர்களுக்கு எதிரானது என்பது […]

நீட் தேர்வு முடிவு: வருகிற 14-ம் தேதி வெளியீடு

நீட்-யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இந்த வாரம் வெளியிட உள்ளது. வரும் 14ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ இந்த என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

நீட் தேர்வு முடிவு வெளியிட தடை

இந்தூரில் நீட் தேர்வு நடைபெற்றபோது சில மையங்களில் மின்சார விநியோகம் தடைபட்ட நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து மத்திய பிரதேச ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மே 4-ந் தேதி, இடியுடன் கூடிய மழை பெய்ததால், தேர்வு மையத்தில் 2 மணி நேரம்வரை மின்தடை ஏற்பட்டதால், தன்னால் சரிவர தேர்வு எழுத முடியவில்லை என்றும், தான் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுபோத் அபயங்கர், […]

முதுகலை நீட் – தேர்வு மையம் ஒதுக்கீட்டில் குளறுபடி?

PG நீட் தேர்வு – தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆந்திராவின் உட்பகுதியில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு. வரும் 11ம் தேதி தேர்வு நடக்க உள்ள நிலையில், தற்போது ரயில்களிலும் முன்பதிவு டிக்கெட் இல்லை, விமான டிக்கெட் கட்டணம் ₹40,000 வரை காட்டுகிறது என தேர்வு எழுத இருப்போர் வேதனை.

நீட் தேர்வு முறைகேடு வழக்கில் 2 பேரை கைது செய்தது சிபிஐ!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டபின் முதல்முறையாக 2 பேர் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 13 பேரை பாட்னா போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் வினாத் தாள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனை: பிஹார் மாணவர் வாக்குமூலம்

பாட்னா: நீட் வினாத் தாள் ரூ.32 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது என்று பிஹார் மாணவர் அனுராக் யாதவ்போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. அதற்கு ஒருநாள் முன்னதாக மே 4-ம் தேதி பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஒரு விடுதிக்கு சுமார் 25 மாணவர்களை, இடைத்தரகர்கள் அழைத்து வந்தனர். அவர்களுக்கு நீட் வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, விடைகளை மனப்பாடம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். […]

நீட் தோ்வு முடிவுகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென வெளியான நிலையில், சில மாணவா்களுக்கு முரண்பட்ட மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருப்பது விமா்சனங்களுக்கு வித்திட்டுள்ளது

அதேபோன்று, ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததாக தகவல்கள் வெளியான சூழலில், முன்னெப்போதும் இல்லாத வகையில், 67 போ் நாடு முழுவதும் முதலிடம் பெற்றிருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நிகழாண்டு நீட் தோ்வு 4,750 மையங்களில் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 23 லட்சம் போ் பங்கேற்றனா். ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண்கள் வீதம் 180 கேள்விகள் வினாத் தாளில் இடம்பெற்றிருந்தன. நீட் தோ்வைப் பொருத்தவரை ஒரு கேள்விக்கு சரியாக விடையளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். […]

“நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை”

நீட் தேர்வு முடிவுகளை திட்டமிட்டபடி வெளியிட எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு 2024 நீட் நுழைவுத்தேர்வு மே 5-ல் நடைபெற்ற நிலையில் ஜூன் 14ஆம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன..

மே 5-ம் தேதி நடைபெற உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் http://exams.nta.ac.in/NEET/ என்ற இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நீட் விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்

2024 இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான தேதி அறிவிப்பு மார்ச் 18-ஆம் தேதி முதல் மார்ச் 20-ஆம் தேதி இரவு 11.50 மணி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு