மார்ச் 14-ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் : சபாநாயகர் அப்பாவு
மார்ச் 14-ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை, மார்ச் 15ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம் ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். மார்ச் 14ம் தேதி காலை 9.30 மணிக்கு பட்ஜெட் தாக்கலுடன் சட்டப்பேரவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி., பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் புனித நீரில் அதிகளவில் மனிதக்கழிவு
உ.பி., பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் புனித நீரில் அதிகளவில் மனிதக்கழிவு என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.உ.பி., மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் புனித நீராடும் நிலையில் அதிகளவில் மனிதக்கழிவு இருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தகவல் அளித்துள்ளது.
தேசிய கிக் பாக்சிங் போட்டியில் 2 தங்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு

தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டிகளில் இரட்டை தங்கம் வென்ற தமிழக மாணவி நிவேதா சீனிவாசன் தமிழக அரசு உதவியால் தொடர் சாதனை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி மேற்குவங்காளம் சிலிகுரில் கடந்த ஜூன் 10ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தேசிய அளவிலான ஜினியர் கிக் பாக்சிங் போட்டி நடைபெற்றது. இதில் 27 மாநிலங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழக சார்பில் நிவேதா சீனிவாசன் பங்கு பெற்றார. […]