தனுஷ்கோடி, அரிசல் முனை, ராம் – சேது பாலம் போன்றவைகளை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் கோவில்,கேரள, ஆந்திர கோவில்களின் புனிதத்தையும் பெருமைகளையும் பிரதமர் விளக்கினார்.
பிணைக்கைதிகள் விடுதலை – பிரதமர் வரவேற்பு

இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டது வரவேற்புக்குரியது அனைத்து பிணைக் கைதிகளும் விரைந்து விடுவிக்கப்பட வேண்டும் – பிரதமர் மோடி
அத்வானி ஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்தேன்……

பிரதமர் நரேந்திர மோடி
“பிரதமர் மோடியை போல் நான் வெறும் வாக்குறுதி மட்டும் கொடுப்பவன் அல்ல. ஒரு வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்றுவேன்”

-ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி.
நீலகிரியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் நிவாரணம் வழங்கப்படும்-பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு
விஸ்வகர்மா திட்டம் காலத்தின் கட்டாயமாகும் – பிரதமர் மோடி

கைவினைஞர்கள், கலைஞர்களின் நம்பிக்கைக் கதிராக விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விஸ்வகர்மா திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.13,000 கோடி செலவிட உள்ளது. விஸ்வகர்மா திட்ட பயனாளிகளை அங்கீகரிப்பதும், ஆதரிப்பதும் காலத்தின் கட்டாயமாகும். விஸ்வகர்மா திட்ட பயனாளிகளுக்கு நவீன கருவிகளை இயக்குதல், தொழில்நுட்ப பயற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும். உபகரணங்கள் வாங்குவதற்காக விஸ்வகர்மா திட்ட பயனாளிகளுக்கு ரூ.1,500 வழங்கப்படும். பொருட்களை பிரிண்டிங், பேக்கேஜிங், சந்தைப்படுத்தல் செய்வதற்கு மத்திய அரசு உதவும்- டெல்லியில் விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கி […]
பெட்ரோல், டீசல் மீதான வரிகள் குறைக்கப்படலாம் ,மோடி தலைமையில் இன்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் ..

கடந்த முறை நடந்த இக்கூட்டத்தில் கேஸ் சிலிண்டர் விலை ₹200 குறைக்கப்பட்டது. 5 மாநில தேர்தல் மற்றும் அடுத்தாண்டு மக்களவை தேர்தலை ஒட்டி பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு: இணையவழியாக பங்கேற்கும் மோடி

சந்திரயான்-3 விண்கலத்தில் செலுத்தப்பட்ட லேண்டர் இன்று தரையிறங்கும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி இணையவழியாக பங்கேற்கவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை வழங்கினார்.

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தை கொண்டாடும் வகையில், அந்நாட்டின் தலைநகர் பாரீசில் இன்று பாஸ்டில் தின அணிவகுப்பு நடக்க உள்ளது. இதில் கவுரவ அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து நேற்று பாரீஸ் புறப்பட்டுச் சென்றார். பாரீஸ் விமானநிலையத்தில் அவரை, பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார். பிரான்ஸ் ராணுவ இசைக்குழுவினர் பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க, […]