வாழ்க்கை முழுவதையும் நாட்டிற்காக அர்ப்பணித்தவர் பிரதமர் மோடி: பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு

தனது குடும்பத்தை பார்க்க பிரதமர் மோடி தற்போது தமிழகத்திற்கு வந்துள்ளார் என்று பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை கூறியுள்ளார். 142 கோடி மக்கள் பிரதமர் மோடியின் குடும்பத்தில் உள்ளனர். தனது வாழ்க்கை முழுவதையும் நாட்டிற்காக அர்ப்பணித்த பிரதமருக்கு நாடே குடும்பம்தான் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்

இந்தியாவின் வளர்ச்சியில் சென்னையின் பங்கு மிகப்பெரியது: பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டிற்கான உறுதிப்பாட்டை நான் ஏற்றுள்ளேன். சென்னை நகரம் திறமை மிக்க இளைஞர்களால் நிறைந்துள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதில் சென்னை வாசிகள் மிக முக்கியமானவர்கள். சென்னையில் மெட்ரோ, விமான நிலையம் என பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து சென்றிருக்கிறோம். சென்னை எப்போதும் பாரம்பரியம், வணிகத்திற்கு மையப் புள்ளியாக இருக்கிறது என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

“தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவு பெருகுவதால் சிலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது!” – பிரதமர் நரேந்திர மோடி

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, வணக்கம் எனக் கூறி தனது உரையைத் தொடங்கினார். ஒவ்வொருமுறை சென்னை வரும்போது உற்சாகம் பிறக்கிறது. பாரம்பரியம் மற்றும் வணிகத்துக்கு மையப்புள்ளியாக சென்னை விளங்குகிறது. சென்னை நகரம் திறன் நிறைந்த இளைஞர்களால் நிரம்பியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் சென்னைக்கு முக்கியப் பங்கு உள்ளது. எனக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது. தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. நான் […]

மக்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி, சரியாக, மதியம் 2:10 மணிக்கு பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார். ஹெலிபேடில் இருந்து மேடை வரை ஒரு கி.மீ., துாரம் மெட்டல் ரோடு அமைக்கப்பட்டு, அதன் மேல் ‘மேட்’ விரித்துள்ளனர். திறந்தவெளி வாகனம் மூலம் தொண்டர்களை பார்த்த படி, பிரதமர் வரும் வகையில் பிரத்யேக நடைபாதையாக இது அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்ந்திருப்பர். இவ்வாறு பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் அமைக்கப்படுவது இதுவே முதன்முறை என்கின்றனர். 50 பெரிய திரைகளுடன் கூடிய எல்.இ.டி., ‘டிவி’க்கள் […]

பாதுகாப்பு பணியில் 5000 போலீசார்!

நேற்று காலை, சூலுாரில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, மாநாடு நடக்கும் இடத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 4,550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நேற்று முன்தினமே போலீசார் வரவழைக்கப்பட்டனர்; யாருக்கு எங்கு பணி ஒதுக்குவது என்பது குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, பணிகள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. உளவுத்துறை போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுக்கூட்ட […]

ஐக்கிய அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஸயீத் அல் நஹ்யான் உடன் சந்திப்பு. இரு தரப்பு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரும்போதெல்லாம் எனது குடும்பத்திரனரை சந்திப்பது போல் உணர்கிறேன். கடந்த 7 மாதங்களில் 5 முறை நான் UAE-க்கு வருகை தந்துவிட்டேன். இது நமது நெருக்கமான உறவை காட்டுகிறது- UAE பயணம் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி.

எதிர்க்கட்சிகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு மத்திய அரசு தயாராக உள்ளது – பிரதமர் நரேந்திர மோடி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி; இது மிகவும் மகத்துவமான ஒரு கூட்டத்தொடர். எதிர்க்கட்சிகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு மத்திய அரசு தயாராக உள்ளது. விவாதங்கள் தீவிரமாக இருக்கலாம், இடையூறு செய்வதாக இருக்கக் கூடாது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் பதிவாகிக்கொண்டுதான் இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் செயல்பாடுகளை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தக்கூடாது. பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து […]

பிரதமர் மோடிக்கு அயோத்தி ராமர் கோயில் வடிவிலான வெள்ளி சிலையை யோகி ஆதித்யநாத் நினைவுப் பரிசாக வழங்கினார்

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு நினைவு பரிசாக வெள்ளியில் செய்யப்பட்ட ராமர் கோயிலின் மாதிரியை உ.பி. முதல்வர் வழங்கினார்.

ராமர் கோவில் சாட்சியாக பாரத தேசத்தை உலகின் உச்சிக்கே கொண்டு செல்வோம் என்று சபதமேற்கிறோம்

அதற்கு ராமபிரான் துணை நிற்பார் என்று கூறி பிரதமர் மோடி உரையை முடித்தார்.45 நிமிட ஆவேச உரையில் நம் நாட்டை பற்றி குறிப்பிடும்போதெல்லாம் பாரதம் என்றே மோடி குறிப்பிட்டார்.பேசி முடித்ததும் முன்வரிசை பிரமுகர்களை சந்தித்து கை கூப்பி நன்றி தெரிவித்தார்.உடன் உ.பி. கவர்னர் ஆனந்திபென் , முதல்வர் ஆதித்யநாத் சென்றனர்.கூடியிருந்த மக்களிடம் கை குலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தார். பிரதமர்.நாலாபுரமும் சுற்றி சுற்றி வந்தார்.

அயோத்தியில ராமர் கோவில் அமைத்ததன் மூலம் ஜென்ம சாபல்யம் அடைந்துள்ளோம் என்றார் பிரதமர்.

ராமர் கோவில் பாரதத்தை ஒற்றுமைப்படுத்துகிறது,ராமர்விலாத பொருளல்ல – சமாதானத்தின் உருவம் என்று தெரிவித்தார் பிரதமர் மோடி.