கர்நாடகா மாநிலத்தில் நந்தினி பால் விலை உயர்வு: இன்று முதல் அமல்

ஒரு லிட்டர் பால் விலை ரூ.42இல் இருந்து ரூ.44 ஆகவும் அரை லிட்டர் பால் ரூ.22இல் இருந்து ரூ.24 ஆகவும் உயர்ந்துள்ளது. கர்நாடக அரசு எரிபொருள் மீதான விற்பனை வரியை உயர்த்திய சில நாட்களுக்குப் பிறகு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3.5 ரூபாயும் உயர்ந்துள்ளது. தற்போது பால் விலையும் அதிகரித்துள்ளது. அமுல், மதர் டெய்ரிக்கு பிறகு தற்போது நந்தினி பால் விலையும் அதிகரித்துள்ளது. தென்னிந்தியாவின் கூட்டுறவு பால் மகாமண்டலமாக செயல்பட்டு […]