நாகை, இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு:

நாளை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைப்பு. புதிய கப்பலுக்கு சர்வதேச பயணத்திற்கான அரசின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவதில் சிக்கல்.

நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிட்ஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான செல்வராஜ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்

67 வயதான செல்வராஜ், 1989,1996,1998,2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்.

கர்நாடக அரசை கண்டித்து நாகையில் கடையடைப்பு

காவிரி தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 ஆயிரம் கடைகளை அடைத்து வியாபாரிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாகை – இலங்கை இடையேயான பயணிகள் போக்குவரத்து கப்பலின் சோதனை ஓட்டம் தொடங்கியது

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை கப்பல் சோதனை ஓட்டம். கப்பலின் கேப்டன் உள்ளிட்ட 14 ஊழியர்களுடன் புறப்பட்டது சிரியாபாணி சுற்றுலா பயணிகள் கப்பல். நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை வரும் 10ம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளது.

நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்!

நாகை – நாகூர் சாலையை மறித்து போராட்டம். கற்கள், கட்டைகளை கொண்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு. போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து வருகின்றனர்.