புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்

சென்னை,தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக தற்போது முதல்-அமைச்சரின் தனி செயலாளராக இருக்கும் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முருகானந்தம் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர். நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதல்வரின் முதன்மைச் செயலாளராக பொறுப்பு வகித்தார்.