முருகர் மாநாட்டில் ஏழு லட்சம் பேர் தரிசனம்
மதுரையில் நடந்த முருகர் மாநாட்டை ஒட்டி அறுபடைவீடு முருகன் கண்காட்சி நடைபெற்றது இந்த கண்காட்சியை 7 லட்சம் பேர் தரிசனம் செய்ததாக இந்து முன்னணி தலைவர் தெரிவித்தார்.இந்த மாநாட்டுக்கு விளம்பரம் தேடி தந்தவர்கள் சேகர்பாபு திருமாவளவன் வைகோ என்றும் அவர் கிண்டல் செய்தார்
முருகர் மாநாட்டில் அதிமுக தலைவர்கள்
மதுரையில் நடந்த இந்து முன்னணி முருகர் மாநாட்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார் கடம்பூர் ராஜு செல்லூர் ராஜு பங்கேற்றனர் இந்த மாநாட்டில் பேசிய அண்ணாமலை எங்கள் வேண்டுகோளை ஏற்று அழைப்பிதழை பெற்ற தலைவர்களின் கட்சி தொண்டர்கள் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளனர் அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்தார்