கூடுவாஞ்சேரி அருகே வட மாநில பெண் அடித்துக் கொலை

கூடுவாஞ்சேரி அடுத்த குத்தனூர் பகுதியில் நடைபெறும் கட்டிட பணிக்காக மும்பையை சேர்ந்த கூலி தொழிலாளி பிரிதிஷ் கைலாஷ் கனுஜா(25), அவர் மனைவி பிரியங்கா குமாரியாதவ்(25) 3 குழந்தைகளுடன் தங்கி வேளை செய்துள்ளனர். நள்ளிரவில் மனைவி பிரியங்கா குமாரியாதவ் தலையில் அடித்து கொலை செய்த நிலையில் பிரிதிஷ் கைலாஷ் கனுஜா தலைமறைவானர். காலையில் தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார் பிரேத்தை கைப்பற்றிய நிலையில் கொளையாளியை தேடிவருகிறார்கள்…
ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் திருச்சியில் கொலை
வள்ளுவன் நகரை சேர்ந்தவர் பிரபு என்கின்ற பிரபாகரன் நான்கு பேர் கொண்ட கும்பலால் கொலை. சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் இவரிடம் கடந்த சனிக்கிழமைதான் விசாரணை நடத்தினர். நாளை மீண்டும் இந்த விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில் படுகொலை.
குரோம்பேட்டை ஷாக்கிங்.. நர்சிங் மாணவியை கொன்ற காதலன் கைது

கேரளமாநிலம் கொள்ளம் மாவட்டம் தென்மலா பகுதியை சேர்ந்த பக்ருதின் என்பரது மகள் பவுசியா(20), இவர் சென்னை குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மெடிகல் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே குரோம்பேட்டை நியூகாலணியில் உள்ள இமை பெண்கள் விடுதியில் தங்கிய நிலையில் கடந்த மூன்று நாட்களாக கல்லூரிக்கு செல்ல வில்லை. இந்த நிலையில் பவுசியாவின் தோழிகள் குரோம்பேட்டை சி.எல்.சி சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் காதலன் கேரளாவை மாநிலம் கொள்ளதை சேர்ந்த ஆசிக்(20) என்பவர் பவுசியாவை […]
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: முருகன் தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன், தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி மனு தொடர்ந்திருந்தார். தமிழ்நாடு அரசு, திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி உள்ளிட்டோர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2022-ல் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முருகன், திருச்சியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை!
மதுரையில் பயணிகளை ஏற்றுவதில் ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்த கொடூரம்! ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் என்பவரை கல்லால் அடித்துக்கொன்ற வழக்கில் சக ஆட்டோ ஓட்டுநர்களான நாகராஜ், சூரிய பிரகாஷ் ஆகிய இருவரும் கைது!
மது போதையில் மகன் தாக்கியதால் தந்தை பலி

தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரி, பஞ்சாயத்து காலனியை சேர்ந்தவர் மணி, (55) இவரது இளைய மகன் சந்துரு( 19) குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் 18ம் தேதி இரவு, மது அருந்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதைபார்த்த மணியின் மூத்த மகன் கார்த்திக், 32, என்பவர் தம்பியை தட்டி கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைபார்த்த தந்தை மணியும், இளைய மகன் குடித்துவிட்டு வந்ததை தட்டிகேட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த சந்துரு, தந்தையை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார் அதில், அவருக்கு தலையில் […]
மேடவாக்கத்தில் தெருக்கூத்து ஆடும் திருநங்கை படுகொலை

சென்னை மேடவாக்கம் அடுத்த கோவிலாஞ்சேரியில் தனியார் வீட்டுமனை பிரிவுக்கு செல்லும் வழியில் உள்ள சிறு மேம்பாலம் அருகே நீரில் மிதந்தவாறு திருநங்கை சடலம் கிடந்தது. மேலும் அங்கு டியோ இருசக்கர வாகனமும் இருந்த நிலையில் தகவல் அறிந்த சேலையூர் போலீசார் பிரேதத்தை மீட்ட நிலையில் தலை, கழுத்து, பின் கழுத்து முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டுகாயங்கள் இருந்ததால் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அதே வேளையில் அங்கு திரண்ட நபர்களிடம் போலீசார் […]
தாம்பரம் வீட்டில் பிரபல ரவுடி தலை சிதைக்கபட்ட நிலையில் வெட்டி கொலை

பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி மோகன் ராஜ் இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது, இந்நிலையில் மோகன்ராஜ் மணிமங்கலம் அடுத்த ஆதனூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்து வந்துள்ளார், இன்று காலை மோகன்ராஜை சில மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துவிட்டதாக அவரது தங்கையின் செல்போனுக்கு தொடப்பு கொண்ட நபர் ஒருவர் கூறியதை அடுத்து பதறி போனவர் சம்பவ இடத்திற்க்கு சென்று பார்தத போது தலை […]
தாம்பரம் பாஜக பிரமுகர் கொலையில் 4 பேர் கைது பழிக்கு பழி வாங்க நடந்த கொடூரம்

சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர்காமராஜர் தெருவை சேர்ந்தவர் பீரி வெங்கடேசன் வயது 33 பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் 2015 ஆம் ஆண்டு கொலை வழக்கு உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். பாரதிய ஜனதா கட்சி பெருங்களத்தூர் முடிச்சூர் மண்டல பட்டியல் அணி தலைவராகவும் பொறுப்பில் இருந்தார்.நேற்று முன்தினம் தேதி இரவில் இருந்து இவரை காணவில்லை.இந்நிலையில் நேற்று பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு தலையில் கல்லை […]
தாம்பரம் அருகே பாஜக பிரமுகர் கொலை ஏன்? தலையை சிதைத்த கொடூரம்

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி மற்றும் பிஜேபி நிர்வாகியான வெங்கடேசன் என்கிற பெரி வெங்கடேசன் இவர் மீது பீர்கன்காரனை காவல் நிலையத்தில் 2015ம் ஆண்டு கொலை வழக்கில் சிறைக்கு சென்று வந்துள்ளார். மேலும் தாம்பரம், சேலையூர் போன்ற காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலவியில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை குட்வில் நகரில் உள்ள காலி மைதானத்தில் தலை முற்றிலுமாக சிதைக்கபட்ட நிலையில் வெங்கடேசன் சடலமாக இருப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் […]