உலகளாவிய கடல்சார்‌ இந்திய உச்சிமாநாடு 2023

மும்பையில்‌, உலகளாவிய கடல்சார்‌ இந்திய உச்சிமாநாடு- 2023. அக்டோபார்‌ 17 முதல்‌ 19 வரை நடைபெற்றுக்‌ கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கான தனி அமர்வில்‌, தமிழ்நாடு பொதுப்பணிகள்‌, நெடுஞ்சாலைகள்‌ மற்றும்‌ சிறு துறைமுகங்கள்‌ துறை அமைச்சர்‌ எ.வ.வேலு‌ கலந்து கொண்டு மாலை உரையாற்றினார்‌. இந்த அமர்வில்‌, சென்னை துறைமுக ஆணையம்‌ மற்றும்‌ காமராஜர்‌ துறைமுகத்‌ தலைவர்‌ சுனில்‌ பாலிவால்‌, நெடுஞ்சாலைகள்‌ மற்றும்‌ சிறு துறைமுகங்கள்‌ துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ பிரதீப்‌ யாதவ்‌. தமிழ்நாடு மின்‌ பகிர்மானக்‌ கழகத்தின்‌ மேலாண்மை […]

“மும்பையில் சந்திக்க ஆவல்” – வீடியோ வெளியிட்ட சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“மும்பை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச தனது மகள் பிரனுஷ்கா விருப்பப்படுகிறார்” என அவர் பேசும் வீடியோவுடன் வேணுகோபால் ஐயங்கார் சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்தார். அதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த சிறுமி பிரனுஷ்கா மற்றும் அவரின் பெற்றோரை அழைத்து சந்தித்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுவதாகவும், மணிப்பூரில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை தன்னை பாதித்ததாகவும் சிறுமி பிரனுஷ்கா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசும்போது தெரிவித்தார். தமிழ்நாட்டில் நடைபெற்று […]

INDIA கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்று மாலை 6. 30 மணிக்கு தொடங்குகிறது

நாளை காலை 10.30 மணிக்கு INDIA கூட்டணியின் லோகோ வெளியிடப்படுகிறது. மேலும் நாளை மதியம் 3.30 மணிக்கு INDIA கூட்டணியின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

மும்பையில் இன்று கனமழை; வானிலை மையம்

மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புனே, கோலாப்பூர், ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை 27ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் (ஜூலை 25) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.