மும்பை – அகமதாபாத்துக்கு விரைவில் புல்லட் ரயில்
மும்பை – அகமதாபாத் இடையே 508 கி.மீ. தூரத்துக்கு புல்லட் ரெயிலுக்காக அதிநவீன தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 12 ரயில் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இத்திட்டத்துக்காக ஜப்பானில் 2 சின்கான்சென் ரக புல்லட் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் இதன் சோதனை ஓட்டம்நடந்து வருகிறது. இந்த புல்லட் ரயில்கள் மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை. புதிய புல்லட் ரயிலில் மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு 2 மணி நேரம் 7 நிமிடங்களில் செல்ல முடியும்.
அகமதாபாத் விமான விபத்தில் 274 பேர் உயிரிழப்பு.
அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு. ஏற்கனவே விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர், பொதுமக்கள் என 33 பேர் உயிரிழப்பு என அதிகாரப்பூர்வ தகவல்.
இஸ்ரேல்-ஈரான் மோதலால் டெல்லி, மும்பையில் விமான போக்குவரத்து பாதிப்பு
ஈரான் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான் நாடு தனது வான்வெளியை மூடியது. இது சர்வதேச விமான போக்குவரத்தை பாதித்தது. குறிப்பாக இந்தியாவில் இருந்து பல வெளிநாடுகளுக்கு சென்ற, அங்கிருந்து வந்த விமானங்கள் பாதிக்கப்பட்டன. இந்த விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டன. இந்தியாவைப் பொறுத்தவரை நேற்று மதியம் வரை 16 விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இந்த பாதிப்புகள் குறித்து டெல்லி விமான நிலையம் பயணிகளுக்கு முன் […]
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் சரிவு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 708 புள்ளிகள் சரிந்து 79,356 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 286 புள்ளிகள் சரிந்து 24,113 புள்ளிகளில் வர்த்தமாகிறது. கடந்த ஒரு மாதத்தில் சென்செக்ஸ் 6600 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை: மகாராஷ்டிரா முதல்வர்

மும்பை தேசிய மையத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ரத்தன் டாடாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என குடும்பத்தார் தகவல். ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை தரப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு.
மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

மும்பை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86. பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவன தலைவருமான ரத்தன் டாடா வயது முதிர்வு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டார். ரத்தம் அழுத்தம் குறைந்ததால் கடந்த திங்கள்கிழமை மும்பை பிரீச் கேன்டி மருத்துவமனையில் ரத்தன் டாடா அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் வெளியான நிலையில், ரத்தன் […]
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 200 புள்ளிகள் குறைந்து 74,302 ஆக வர்த்தகம்;

தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 27 புள்ளிகள் குறைந்து 22,677 ஆகவும் வர்த்தகம்
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (81) மும்பை மருத்துவமனையில் அனுமதி
மும்பாய், குர்லாவில் அரிமா சங்க ‘Give Conclave’ நிகழ்ச்சியில், கவுன்சில் சேர்மன்கள் இளங்கோவன் மற்றும் சிவகுமார், அரிமா ஆளுநர் பஜேந்திரபாபு-வுடன் மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர் கே.எம்.ஜே.அசோக்
தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்டை ₹5 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி