சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

அண்மையில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இருந்து திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் திமுக எம்பிக்களை முதல்வர் மு க ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

புகை குப்பிகள் வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதாக மொத்தம் 15 எம்.பிக்கள் சஸ்பெண்ட்;

கனிமொழி, கே.சுப்ரமணியம், எஸ்.ஆர்.பார்த்திபன், எஸ்.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 9 எம்.பிக்கள் சஸ்பெண்ட் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு

V2M மக்களவையில் மேலும் 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன் உள்ளிட்ட 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், எஸ்.ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் ஹைபி ஈடன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மேலும் 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

காவிரி நீர் விவகாரத்தில் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்கும் தமிழக எம்.பிக்கள்

துரைமுருகன் தலைமையில் டெல்லி செல்லும் தமிழக அனைத்துக்கட்சி எம்.பிக்கள் 12 பேர் அடங்கிய குழு திமுகவின் டி.ஆர்பாலு, காங்கிரசின் ஜோதிமணி, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் சந்திரசேகரன் குழுவில் இடம் பெற்றுள்ளனர். மதிமுகவின் வைகோ, விசிகவின் திருமாவளவன், பாமகவின் அன்புமணி, தமாகாவின் ஜி.கே.வாசன் இடம் பெற்றுள்ளனர். சுப்பராயன்(சிபிஐ), ஆர்.நடராசன்(சிபிஎம்), சின்னராஜ்(கொமதேக), நவாஸ் கனி(இ.யூ.மு.லீ) இடம் பெற்றுள்ளனர்.

தேவகவுடா பேரன் எம்.பி. பதவி இழப்பு: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா அமோக வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியை சேர்ந்த சமூகஆர்வலர் தேவராஜ் கவுடா என்பவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘தேர்தலின்போது பிரஜ்வல் ரேவண்ணா தாக்கல் செய்த‌ பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவரது சொத்து மதிப்பில் ரூ. 24 கோடி குறைவாக காட்டப்பட்டுள்ளது. தேர்தல் […]

கே.வி. பள்ளிகளில் எம்.பி.களுக்கான இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டமில்லை.

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில், எம்.பி.க்களுக்கான இடஒதுக்கீடு திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் எண்ணம் இல்லை என மக்களவையில் இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி தகவல். 788 எம்.பி.க்களின் பரிந்துரையில், 7800 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு மத்திய அரசு இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. அதிக மாணவர்கள் சேர்க்கப்பட்டதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதாக அரசு விளக்கம்.