ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தின் முன்னோட்டம், ஹாலிவுட் படமான ‘மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்’ எனும் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் திரையிடப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

‘பதான்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மெகா சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் தயாராகி, விரைவில் வெள்ளி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘ஜவான்’. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம், ‘மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்’ எனும் ஹாலிவுட் படம் வெளியாகும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இது தொடர்பாக ட்விட்டரில் வெளியான பதிவில்…# ஷாருக்கானின் அடுத்த வெளியீட்டிற்கான கவுண்ட் டவுனைத் தொடங்குங்கள். # ஜவான் படத்தின் முன்னோட்டத்தை காண தயாராகுங்கள். # மிசன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் […]

நேற்று மாமன்னன் திரைப்படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினார்

“மாமன்னன் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்” என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘ஹரா’ திரைப்படத்தில் வெள்ளிவிழா நாயகன் மோகனுடன் மோதும் சுரேஷ் மேனன், அமைச்சராக அசத்தும் வனிதா விஜயகுமார்

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிப்பில், ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தில் அவருடன் மோதும் எதிர்மறை பாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். மேலும், அதிரடி அரசியல்வாதியாகவும் அதகளம் செய்யும் அமைச்சராகவும் இதுவரை ஏற்றிராத வித்தியாச வேடத்தில் வனிதா விஜயகுமார் நடிக்கிறார். ‘ஹரா’ திரைப்படத்தில் சுரேஷ் மேனன் மற்றும் […]

ரூ.10 கோடி வசூலைத் தாண்டிய ‘மாமன்னன்’

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள ‘மாமன்னன்’ ஜூன் 29ம் தேதி வெளியானது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வரும் இந்த படம் முதல் நாளில் ரூ.6 கோடியையும், 2வது நாளான நேற்று (ஜூன் 30) 5 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களில் அதிக திரைகளில் வெளியான படம் ‘மாமன்னன்’ என்பது குறிப்பிடத்தக்கது.