மலேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது

மலேசிய மோசடி கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து சிம் கார்டு வாங்கி சென்று மோசடியில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த சாம் மேன் தாங் கைது செய்யப்பட்டார்.

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ₹65 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் மீது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

சேலத்தைச் சேர்ந்த பாய் வியாபாரி முனுசாமியிடம் மோசடி செய்ததாக புகார். ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 80 பேரை பணிக்கு எடுப்பதாக கூறி ₹65 லட்சம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு.

மோசடியில் சிக்கிய நடிகை சனம் ஷெட்டி

டெலிகாம் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி நடிகை சனம் ஷெட்டியிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை செய்துள்ளார். அவரது பதிவில், மோசடி அழைப்புகள், ஆன்லைன் மோசடிகளால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம். சந்தேகத்திற்கிடமான லிங்க்-களைக் கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மோசடி அழைப்புகள் குறித்து குடிமக்களுக்கு டிராய் எச்சரிக்கை!

டிராய் அமைப்பின் அழைப்புகள் என்ற போர்வையில், மக்களுக்கு முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட அழைப்புகள் ஏராளமாக வருவதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் எண்கள் விரைவில் துண்டிக்கப்படும் என்று அச்சுறுத்தப்படுகிறார்கள், மேலும் சில தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு கேட்கப்படுகிறார்கள். மொபைல் எண் துண்டிப்பு தொடர்பாக வாடிக்கையாளர்களுடன் செய்திகள் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ டிராய் தொடர்பு கொள்ளாது என்பதை இதன் மூலம் அறிவிக்கிறது. இதுபோன்ற நோக்கங்களுக்காக வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள […]

புதையல் ஆசை காட்டி நகை மோசடி தாம்பரத்தில் பெண் கைது

தங்கப்புதையல் கிடைத்து இருப்பதாக கூறி போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்த கர்நாடக மாண்டிய மாவட்ட கும்பலை சேர்ந்த பெண் ஒருவரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர் தலைமறைவாக உள்ள கும்பலுக்கு வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை தி நகர் பகுதியைச் சேர்ந்த மாற்று திறானாளியான ருக்மணி இவர் கணவர் ராமநாதன் இவர்கள் நடத்திய ஜெராக்ஸ் கடைக்கு கடந்த 14? தேதி வந்த இரண்டு ஆண் நபர்கள் சார்ஜர், ஹெட்போன் என சிறிய சிறிய பொருட்களை […]

குரோம்பேட்டையில் துப்பாக்கி, கை விலங்குடன் மோசடி போலீஸ் கும்பல் கைது

குரோம்பேட்டையில் மருந்து விற்பனையாளரை போலீஸ் என கூறி துப்பாக்கி கை விலங்குடன் மிரட்டி 50 லட்சம் பறிக்க முயன்ற கும்பல் பிடிப்பட்டது.இதற்கு உதவிய வக்கீலும் பிடிபட்டார். குரோம்பேட்டையை சேர்ந்த மருந்து விற்பனையாளர் அசாரூதின்(32) மொத்தமாகவும், சில்லறையாகவும் மருத்துகளை குறைந்த விலையில் விற்பனை செய்து நல்ல லாபம் பார்த்துள்ளார். அதே குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை மருந்தக தலைமை அலுவலர் இம்ரான்(28).இவருக்கு அசாரூதின் தொழில் மீது ஒரு கண் விழுந்தது, அவரை துரத்திவிடவும் அல்லது மிரட்டிபணம் பறிக்க திட்டமிட்டார். […]

அப்பாவிப் பெண்கள் பெயரில் கடன் வாங்கிய மோசடி பெண் இன்ஜினியர் கைது

சென்னை தாம்பரம் கண்ணடபாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், இவர் மனைவி சித்திரா(48) இவர்கள் வீட்டிற்கு வந்த Prefer Finance கடன் வசூலிப்பவர் சசிக்குமார் வாங்கிய கடனுக்கு ஏன் இரண்டுமாதமாக தவனை தொகை கட்டவில்லை என கேட்டுள்ளார். அதற்கு வெங்கடேசன்- சித்திரா தம்பதியினர் தங்கள் யாரும் தனியார் பைனாசில் கடன் வாங்க வில்லை என கூறியுள்ளனர். மேலும் இது குறித்து தம்பதி யோசித்து பார்த்தபோது கடந்த மூன்று மாதம் முன்பாக 7.8.23ம் தேதி அவர்களின் மகள் […]