சந்திரயான்-3 எடுத்ததாக போலி படங்கள்

புதுடில்லி: நிலவில் ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம், நிலவில் தரையிறங்கி பிறகு அங்கிருந்து பூமியை புகைப்படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்ற கோணத்தில் ‘செயற்கை நுண்ணறிவு’ படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்கள் வைரலாகின. நிலவில் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது 5வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பூமியில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு மாற்றப்பட இருக்கிறது. […]
புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: 41 நாளுக்கு பிறகு நிலவை சென்றடைகிறது.

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் நேற்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடங்களில், திட்டமிட்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 41 நாள் பயணத்துக்கு பிறகு, ஆகஸ்ட் மாத இறுதியில் நிலவை சந்திரயான்-3 சென்றடைகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை அனுப்பியது. அது நிலவின் தரைப்பகுதியில் இருந்து 100 கி.மீ. உயரத்தில் […]