நாளை முதல் வானில் 2 நிலா

பூமிக்கு அருகே 14 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் வரும் சிறிய விண்கல் சூரிய ஒளிப்பட்டு, பூமியை நோக்கி திரும்பும் என்பதால், நாளை முதல் வானில் 2 நிலவு தோன்றும் என விஞ்ஞானிகள் தகவல்

நிலவில் அணு மின் நிலையம் – ரஷ்யா திட்டம்

நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்ய விண்வெளி மையம் திட்டம். இதில் இணைந்து செயல்பட இந்தியா, சீனா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது! 2036-க்குள் இந்த அணு மின் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் எனவும், ரஷ்யா-சீனா இணைந்து உருவாக்கி வரும் சர்வதேச நிலா ஆராய்ச்சி நிலையத்துக்கு (ILRS) தேவையான மின்சாரத்தை இந்த அணு மின் நிலையம் வழங்கும் எனவும் தகவல்

நிலவில் குகைகள் உள்ளன மயில்சாமி அண்ணாதுரை தகவல்

வலி மண்டலம் இல்லாத நிலவில் கதிர்வீச்சுகளில் இருந்து தப்ப குகைகள் பயன்படும். பாறை குழம்புகள் வெளியேறிய பகுதிகள் பள்ளங்களாகவும், குகைகளாக நிலவில் பல பகுதியில் உள்ளது சந்திரியான் 1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கேளம்பாக்கம் அருகே பேட்டி:- சென்னை கேளம்பாக்கம் அடுத்த தையூரில் ஏவுகளை ஆராய்சியாளர் ஆனந்த் மேகலிங்கம் புதியதாக 9600 சதுர அடியில் அமைத்துள்ள ஆராய்சிமைய்யத்தை சத்திரயான் 1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை திறந்துவைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை :- […]

2023ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது

சந்திர கிரகணத்தை இந்தியாவில் தெளிவாக பார்க்கலாம் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரிவதால் 8 மணி நேரம் தோஷ காலமாக கருதப்படுகிறது. இன்று இரவு சந்திர கிரகணம் நிகழ்வதால் கோவில்களில் பூஜை நேரங்களில் மாற்றம். பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சமயபுரத்தில் தரிசன நேரத்தில் மாற்றம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது. சந்திர கிரகணம் முடிந்து பரிகார பூஜைகள் முடிந்த பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.

ரோவர் எடுத்த 3D புகைப்படம் வெளியீடு

நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டரின் முப்பரிமாண புகைப்படம் வெளியீடு,ஆக.30ம் தேதி Navcam Stereo மூலம் ரோவர் எடுத்த 3D புகைப்படத்தை வெளியிட்டுள்ளது இஸ்ரோ.

நிலவில் ஆக்சிஜன் இருப்பதை கண்டறிந்த பிரக்யான் ரோவர் – தனிமங்கள் இருப்பதும் உறுதி…!

நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.பெங்களூரு, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்த இஸ்ரோவின் சந்திரயான் – 3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி ஏவப்பட்டது. சந்திரயான் – 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு […]

நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர்: இஸ்ரோ

நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் கண்டுபிடித்த பிரக்யான் ரோவர் நிலவில் ஆக்சிஜன் இருப்பதையும் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ தகவல். பிரக்யான் ரோவர் ஹைட்ரஜன் இருக்கிறதா என ஆய்வு செய்வதாக இஸ்ரோ தகவல். ரோவரில் உள்ள Laser-Induced Breakdown Spectroscope எனும் கருவி தனிமங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது.

சந்திரயான் 3 திட்டம் வெற்றி: நிலவின் தென் துருவத்தில் கால்பதித்த முதல் நாடு இந்தியா

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு நிலவில் கால்பதித்த நான்காவது நாடாக இந்தியா இருக்கிறது. அதேசமயம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் உலகின் ஒரே நாடாக இந்தியா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சந்திரயான் – 3 சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை சரியாக 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. முன்னதாக, பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு தலைமையகத்தில் விக்ரம் […]

நிலவின் தட்டையான மேற்பரப்பை தேர்ந்தெடுத்த விக்ரம் லேண்டர்: இஸ்ரோ முக்கிய அப்டேட்

நிலவில் தரையிறங்கிய பிறகு பிரக்யான் ரோவரை சுமந்து செல்லும் “விக்ரம்” லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. நிலவின் தட்டையான மேற்பரப்பில் வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சற்றுமுன்னதாக, நிலவில் தரையிறங்கிய பிறகு பிரக்யான் ரோவரை சுமந்து செல்லும் விண்கலத்தின் “விக்ரம்” லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. சந்திரயான் விண்கலம் தரையிறங்கிய தளத்தின் ஒரு பகுதியை புகைப்படம் காட்டுகிறது. மேலும், இந்த புகைப்படத்தில் விக்ரம் லேண்டரின் கால், அதனுடன் நிழலும் தெரிகிறது. மேலும் […]