ரயில் டிக்கெட் கட்டணம் உயர்கிறது.*

ரயில்களில் ஏசி வகுப்பு டிக்கெட் கட்டணத்தை கிலோமீட்டருக்கு 2 பைசாவும், சாதாரண வகுப்புகளுக்கு கி.மீட்டருக்கு 1 பைசாவும் உயர்த்த இந்திய ரயில்வே முடிவு இந்த கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. புறநகர் ரயில்கள், 500 கி.மீ.க்கு குறைவான 2ம் வகுப்பு பயணத்திற்கு கட்டண உயர்வு இல்லை

500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு.

இந்தியாவில் மீண்டும் 500 ரூபாய் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து உள்ளது என்று ரிசர்வ் வங்கி கவலை வெளியிட்டுள்ளது. கள்ள நோட்டு புழக்கம் 37 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .ஏற்கனவே கள்ள நோட்டை தடுக்க 500 ரூபாய் நோட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது

ரூ.500 நோட்டுகளை வாபஸ் பெற கோரிக்கை.

கடப்பாவில் நடந்த தனது கட்சி மாநாட்டில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “உலகில் பல நாடுகள் டிஜிட்டல் கரன்சிக்கு மாறியுள்ளன. தெலுங்கு தேசம் கட்சிக்கான நன்கொடை வசூல் கூட டிஜிட்டல் முறையில் தான் பெறப்படுகிறது. இந்நிலையில், இந்த கூட்டத்தின் மூலம் இன்று நான் ஒன்றை வலியுறுத்துகிறேன். ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற என்ஜினீயர் வீட்டில் 60 பவுன் கொள்ளை

துக்க நிகழ்சிக்கு சென்ற ஐ.டி பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை, 50 ஆயிரம் பணம் கொள்ளை. சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் பல்லாவா கார்டன் 8 வது தெருவை சேர்ந்தவர் குமரன் (44), இவர் மனைவியின் தந்தை கும்பகோணத்தில் வசித்த நிலையில் சிலநாட்களுக்கு முன்னதாக காலமானர். அந்த துக்க நிகழ்வுக்கு 30ம் தேதி வீட்டை பூட்டி சென்ற நிலையில் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி வந்தபோது கிரில் பூட்டு, கதவு உடைக்கப்பட்டு இருந்தது. […]

97.76% ரூ2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது!

ஏப்ரல் 30, 2024 வரை 97.76% 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. ரூ7,961 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றன. மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கியின் 19 கிளைகள், வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்! – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

மக்களவைத் தோ்தல் செலவுகள் ரூ.1.34 லட்சம் கோடியை எட்டும்: தோ்தல் நிபுணா் கணிப்பு

நடப்பு மக்களவைத் தோ்தலுக்கான செலவுகள் ரூ.1.34 லட்சம் கோடியை எட்டும் என தோ்தல்கள் குறித்து ஆய்வு நடத்தும் நிறுவனத்தைச் சோ்ந்த நிபுணா் ஒருவா் கணித்துள்ளாா். கடந்த காலங்களில் நடைபெற்ற தோ்தல் செலவுகளைவிட தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் செலவே மிக அதிகமானது எனவும் உலகிலேயே மிக அதிகமாக செலவு செய்யப்படும் பிரம்மாண்ட தோ்தலும் இதுதான் எனவும் அவா் தெரிவித்தாா்

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் 10 ஆயிரம் ரூபாய் வெகுமதி.. தமிழக அரசின் புதிய அரசாணை

சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கனவே மத்திய அரசால் ரூ.5 ஆயிரம் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசும் 5000 ரூபாய் உதவி தொகை வழங்குவதாக அறிவித்தது. இதன்படி ரூ.10 ஆயிரம் வெகுமதி அளிப்பதற்காக தமிழ்நாடு அரசு அரசாணை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசும் போது, சாலை விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றும் நற்கருணை வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூ.5 ஆயிரம் தொகை […]