தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பிரதமர் மோடி பேசியதாக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தி பேசியதாக பா.ஜனதாவும் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தன. இந்த புகார் தொடர்பாக 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைவர்களின் பேச்சு கடுமையான விளைவுகளை […]

வரும் 15ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை

தேர்தல் பரப்புரைக்காக வரும் 15ம் தேதி மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. திருநெல்வேலி தொகுதிக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் பகுதியில் மாலை 4.15 மணிக்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

தமிழகத்தில் 4 நாட்கள் பிரதமர் பிரச்சாரம்

தமிழகத்தில் 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி ஏப்ரல் 9, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வாகன பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார் ஏப்ரல் 9ம் தேதி காலை வேலூரில் வாகன பேரணி, மாலை தென்சென்னையில் வாகன பேரணியில் பங்கேற்கிறார் ஏப்ரல் 10ம் தேதி நீலகிரியில் வாகன பேரணியும், கோவையில் பொதுகூட்டத்திலும் பங்கேற்கிறார் ஏப்ரல் 13ம் தேதி பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் ஏப்ரல் 14ம் தேதி விருதுநகரில் நடைபெறும் […]

“எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும்”

ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா? – பிரதமர் மோடி கேள்வி ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர். கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே பிறந்துள்ளேன் – பிரதமர் மோடி

கச்சத்தீவு – காங்கிரஸ் மீது பிரதமர் குற்றச்சாட்டு

கச்சத்தீவை காங்கிரஸ் எப்படி தாரைவார்த்தது என்ற உண்மை தற்போது வெளிவந்துள்ளது. கச்சத்தீவு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பெற்ற தகவலை பகிர்ந்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு காங்கிரஸை நாம் ஒரு போதும் நம்ப முடியாது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்த காங்கிரஸ் கட்சி 75 ஆண்டுகளாக உழைத்து வருகிறது. – பிரதமர் மோடி

“மோடி மீண்டும் ஜெயிக்கக்கூடாது,தோக்கணும்”

-மதுரையில் நடைபெற்ற தனது ஆதரவாளர் திருமண விழாவில் கலந்து கொண்ட பின் மக்களவைத் தேர்தல் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து

“குமரியில் 1995ல் ஏக்தா யாத்திரை துவங்கிய போது பிரதமர் மோடிக்கு முக்கிய பங்கு இருந்தது”

“1892ல் குமரிக்கு வந்த நரேந்திர தத்தா பாறை மீது அமர்ந்து விவேகானந்தராக மாறினார்” “தற்போது இங்கு வந்துள்ள பிரதமர் மோடி ஞானியாக மாறியுள்ளார்” “தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் மோடி பிரதமர் ஆவார்”

கன்னியாகுமரி வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ், சகோதர, சகோதரிகளே என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்

கன்னியாகுமரிக்கு இன்று காலை வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி அரங்கில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.