கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் செய்து வரும் நிலையில் அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!

காலையில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென வெளியேற்றப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் தவிப்பு..
கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை அரை நிர்வாணமாக பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க பாஜகவினர் புகார் மனு

குமரியை சேர்ந்த நிர்மல் ஸ்டாலின், சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார்
விவேகானந்தர் பாறையில் தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி: முப்படை பாதுகாப்பு வளையத்தில் குமரி!

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்துவிட்டு, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி வியாழக்கிழமை தொடங்கினார். பிரதமருக்கு வான்வழி, கடல்வழி, தரைவழி என முப்படை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 நாள் தியானம்: மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தென்மூலையில் அமைந்துள்ள கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையின் தியான மண்டபத்தில் வருகிற ஜூன் 1-ம் தேதி வரை […]
“கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம்”

தமிழக பாஜகவினருக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவு பிரதமரின் தனிப்பட்ட தியான நிகழ்வை அரசியல் கட்சி நிகழ்வாக மாற்றக்கூடாது என அறிவுறுத்தல் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்காக, விடுதியில் அறைகள் புக் செய்யப்பட்டிருந்த நிலையில் ரத்து
தோ்தலுக்கு பிறகு மோடியை அமலாக்கத் துறை விசாரிக்கும்: ராகுல் காந்தி

ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு (வாக்கு எண்ணிக்கை நாள்) பிரதமராக இருந்த மோடியிடம் அமலாக்கத் துறை ஊழல் தொடா்பாக விசாரணை நடத்தும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.
இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு மோடி பெயரில் விண்ணப்பம்

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பெயரில் போலியாக விண்ணப்பங்கள் பதிவு. கூகுள் விண்ணப்பம் மூலம் பெயர்களை பதிவு செய்ய பிசிசிஐ கூறிய நிலையில் போலி விண்ணப்பங்களால் சர்ச்சை. மோடி, அமித்ஷா மட்டுமின்றி சச்சின், தோனி, சேவாக் ஆகியோரின் பெயர்களிலும் போலியாக விண்ணப்பம் பதிவு. மொத்தம் 3000 விண்ணப்பங்கள் குவிந்துள்ள நிலையில், இதில் எது உண்மையான விண்ணப்பம் என கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதானி, அம்பானி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்புங்கள்: பிரதமர் மோடிக்கு, ராகுல் காட்டமான பதில்

காங்கிரஸ் கட்சிக்கு வேன் நிறைய பணம் கொடுத்தார்களா? என்பதை விசாரிக்க அதானி, அம்பானி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்புமாறு பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி காட்டமான பதில் கொடுத்து உள்ளார்.நாட்டின் பிரபல தொழிலதிபர்களான அதானி, அம்பானி குறித்து வசைபாடி வந்த காங்கிரசும், ராகுல் காந்தியும், தற்போது அதை நிறுத்தி விட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். அவர்களிடம் இருந்து வேன் நிறைய கட்டுக்கட்டாக பணம் காங்கிரஸ் பெற்றுள்ளதா? என்பதை ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். […]
காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சவால்

இந்திய அரசியல் சாசனத்தை மதம் சார்ந்து திருத்தம் செய்ய மாட்டார்கள் என எழுதித் தர முடியுமா ? எஸ் சி, எஸ் டி, ஓ பி சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடை ரத்து செய்துவிட்டு அதை மத நம்பிக்கையில் வழங்க மாட்டோம் என எழுதி தர முடியுமா? காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் இவ்வாறு இட ஒதுக்கீடு முறையை மாற்றி அமைக்க மாட்டோம் என எழுதித் தர முடியுமா என பிரதமர் நரேந்திர மோடி […]
அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு அதீத பயம் ஏற்பட்டதால் தொகுதி மாறியுள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

வயநாடு தொகுதியில் தோற்றுவிடுவோம் என தெரிந்ததால் புதிய தொகுதியில் போட்டியிடுகிறார். சோனியா காந்தி தேர்தலில் போட்டியிட பயந்து மாநிலங்களவை எம்.பி. ஆகியுள்ளார் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
வெற்றி கைநழுவி விட்டது பிரதமர் மோடிக்கு தெரியும்: ராகுல்

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கான வெற்றி கைநழுவி போய்விட்டதை பிரதமர் நரேந்திர மோடி நன்கு அறிந்துள்ளார். இது அவரது பேச்சிலிருந்து உணர முடிகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்