18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் முதல் எம்.பி.யாக பிரதமர் மோடி பதவியேற்றுக் கொண்டார்

தற்காலிக சபாநாயகர் மஹ்தாப் பிரதமர் மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் யோகா ஆர்வலர்களுடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்த பிரதமர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா ஆர்வலர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி செல்ஃபி எடுத்துக்கொண்டார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: ஸ்ரீநகரில் யோகா செல்ஃபிகள் பதிவு! இங்கே தால் ஏரியில் ஈடு இணையற்ற அனுபவம்.
3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி இன்று தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றார்

அங்கு, பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான நிதியை பிரதமர் விடுவித்தார். இதன் பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:சமீபத்தில் ஜி7 நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க இத்தாலி சென்றேன். இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட, இந்திய தேர்தலில் ஓட்டளித்தவர்களின் எண்ணிக்கை 1.5 மடங்கு அதிகம். இந்த தேர்தலில் 31 கோடி பெண்கள் ஓட்டுப் போட்டு உள்ளனர். தேர்தலில் அதிக பெண்கள் ஓட்டுப் போட்டது இந்தியாவில் மட்டுமே. இந்த எண்ணிக்கை, அமெரிக்க மக்கள் தொகைக்கு இணையாக […]
மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்:

பிரதமர் மோடி அறிவிப்பு
ஜோ பைடனை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி : பிரதமர் மோடி பதிவு

இந்த ஆண்டு ஜி-7 மாநாட்டை தலைமையேற்று நடத்தும் இத்தாலி அரசு, இந்தியா உள்பட 12 வளரும் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார். இத்தாலியில் அபுலியா பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் தொடங்கிய ஜி-7 மாநாடு இன்று நிறைவடைகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியோ உள்ளிட்ட […]
இத்தாலி சென்றடைந்தார் மோடி!

இத்தாலியில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டின் அமா்வில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அதிகாலை சென்றடைந்தார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடிக்கு இத்தாலி அரசு வரவேற்பு அளித்தது. இந்த பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மோடி, “ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலியில் தரையிறங்கிவிட்டேன். உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ஈடுபட ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒன்றாக, உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதையும், பிரகாசமான எதிர்காலத்திற்கான சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதைதே நோக்கம்.” […]
பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 3 கோடி வீடுகள் கட்ட நிதியுதவி அளிக்க முடிவு

பிரதமர் மோடி தலைமையிலான முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல். கடந்த 10 ஆண்டுகளில் 4.21 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட முடிவு.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்திப்பு!

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி & பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினார்
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

மோடி பதவியேற்று 21 மணி நேரமாகியும் இலாகாக்கள் அறிவிக்கப்படாததால் பதவியேற்றுள்ள அமைச்சர்கள் குழப்பம்
சுரேஷ் கோபி தனது முகநூல் பக்கத்தில், “நான் அமைச்சரவையில் இருந்து விலகவுள்ளதாக தவறான செய்தி பரவி வருகின்றது. இது முற்றிலும் தவறானது..

மோடியின் தலைமையின்கீழ் கேரளத்தின் வளர்ச்சிக்காக பணியாற்ற உறுதியாக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்..