வரிவிதிப்பு : அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் வரிவிதிப்பை அறிவித்துள்ளது இதற்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்காவைப் பொறுத்தவரை, அதன் அணுசக்தித் தொழிலுக்கு யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு, அதன் மின்சார உற்பத்தித் தொழிலுக்கு பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றை ரஷ்யாவில் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்கிறது. இந்த விவகாரத்தில், இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது. எந்தவொரு பெரிய நாடுகளின் பொருளாதாரத்தையும் போலவே, இந்தியாவும் தனது நாட்டின் நலன்களையும், பொருளாதாரப் […]
உலகின் நம்பிக்கையான தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம்
உலக தலைவர்களில் நம்பிக்கையான தலைவர் யார் என்று சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் ஒவ்வொரு நாட்டு தலைவரும் எப்படி நடந்து கொள்கின்றனர் என்றும் ஆய்வு செய்யப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வின்போது, உலகத் தலைவர்களுக்கு அவர்களது சொந்த நாட்டில் எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்றும் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதோடு உலக நாடுகளில் எந்த அளவுக்கு மரியாதை இருக்கிறது என்றும் ஆய்வு […]
ஓபிஎஸ்க்குஅனுமதி மறுப்பு
தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கேட்டிருந்தார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியிடுகிறார் பிரதமர் மோடி
ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா ஆகியவற்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக இந்த விழா நடைபெற இருக்கிறது. விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். இந்த விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரியலூரில் நடைபெறும் விழாவில் பங்கேற்றுவிட்டு, தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங்களில் […]
காமராஜர் பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
திரு கே. காமராஜரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார். அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும். – பிரதமர் நரேந்திர மோடி
மோடி விழாவில் ஸ்டாலின் பங்கேற்பு
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27ஆம் தேதி தமிழகம் வருகிறார் இரண்டு நாட்கள் அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ராஜராஜன் சோழன் பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்கிறார். இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினும் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது
குஜராத் விமான விபத்தை பார்வையிட்ட மோடி
நெஞ்சை பிளக்கும் வகையில் நடந்த குஜராத் விமான விபத்து, நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது..விபத்து நடந்த இடத்தை மத்திய மந்திரி அமித்ஷா நேற்று பார்வையிட்ட இன்று காலையில் எட்டு மணிக்கு பிரதமர் மோடி தனி மூர்த்தியில் சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்
புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள் இன்று திறப்பு
தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று (மே 22) தொடங்கி வைக்கிறார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் திறந்து வைக்கிறார். சென்னை பரங்கி மலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி நிலையங்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் திறக்கப்படுகின்றன.
ஏப்ரல் 6-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி தமிழகம் வருகிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து இறங்கும் பிரதமர், அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் வரவுள்ளதாகவும்.புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்து, ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்கிறார். இதைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி […]
நவராத்திரியின் ஐந்தாம் நாளில் பிரதமர் ஸ்கந்தமாதா தேவியை வழிபட்டார்

நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி ஸ்கந்தமாதா தேவியை வழிபட்டார். சமூக ஊடக வலைதளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:அன்னை துர்க்கையின் ஐந்தாவது வடிவமான ஸ்கந்தமாதா தேவியின் பாதங்களில் வணக்கம்! அனைவருக்கும் சுக்தாயினி – மோக்ஷதாயினி மாதாவின் ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும். இந்த நிகழ்ச்சியில் அவரைப் பற்றிய ஒரு புகழுரை