மேற்குவங்க மாநிலத்தில் துபுகுரி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கைவசம் வைத்திருந்த தொகுதியை கைப்பற்றியது திரிணாமுல் காங்கிரஸ்
“கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை எப்படி வெல்வது என்பது நம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தான் தெரியும்;

G20 மாநாடு நடைபெறும் பாரத மண்டபத்தின் முன் நிறுவப்பட்டுள்ள உலகின் மிக உயரமான நடராஜர் சிலை, நமது கலாச்சாரம், வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் மீதான அவரது அன்பைக் காட்டுகிறது; இதற்காக தான் உலகமே உங்களை பின்தொடர்கிறது”
நிகழ்ச்சி நிரல்கள் என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல்கள் என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். நிகழ்ச்சி நிரல் என்ன என்பதை தெரிவிக்க கோரி பிரதமர் மோடிக்கு I.N.D.I.A. கூட்டணி சார்பில் சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். சிறப்பு கூட்டத்தொடரில் முக்கிய விவகாரங்களை குறித்து விவாதிக்கவும் சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
சனாதனத்தை தவறாக பேசினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும்!.

-அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்! டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எந்த மதத்தையும் இழிவுபடுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்தியா-பாரத் பெயர் சர்ச்சை தொடர்பாக அங்கீகரிக்கப்பட்டவர்களே பதில் அளிக்க வேண்டும் எனவும் மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் மோடி போட்டியிட்டால் எதிர்த்து போட்டியிடுவேன்: திமுக நின்றால் ஆதரிப்பேன் சீமான்

செப்டம்பர் 15 அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி நீண்ட காலமாக சிறையில் வாடும் முஸ்லிம்களை விடுதலை செய்தால் திமுகவை நான் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஆதரிப்பேன்அதே வேளையில் ராமேஸ்வரத்தில் மோடி போட்டியிட்டால் அவர் எதிர்த்துப் போட்டியிடுவேன் ஒருவேளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமல் திமுக தனது உதயசூரியர் தினத்தில் நின்றால் அது கட்சி வேட்பாளரை ஆதரிப்பேன் நான் நடந்து ..நடந்து.. கட்சி வளர்ப்பவன் அல்ல ! நடப்பதை சொல்லி கட்சியை வளர்ப்பவன் கூட்டத்தில் ஒரு கட்டத்தில் தொண்டர் ஒருவர் […]
2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்…

ஊழல், சாதி, மதவாதத்துக்கு இடமில்லை… பிரதமர் மோடி சிறப்பு பேட்டி… தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்க தொடங்கியதில் இருந்து சாதகமான பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவற்றில் சில தாக்கங்கள் எனது இதயத்துக்கு நெருக்கமானவை. இந்தியா 100 கோடிக்கு மேற்பட்ட பசித்த வயிறுகளைக் கொண்ட […]
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர் தருமன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தருமன் சண்முகரத்னத்திற்கு பிரதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா – சிங்கப்பூர் இருதரப்பு உறவில் இணக்கமான சூழலை ஏற்படுத்த தருமன் சண்முகத்தோடு இணைகிறேன் என கூறியுள்ளார். சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தருமன் சண்முகரத்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தருமன் சண்முகரத்னத்திற்கு எனது வாழ்த்துக்கள். தருமனின் ஈர்க்கக்கூடிய தகுதிகள், தமிழ் பாரம்பரியம் எங்களை பெருமைப்படுத்துகிறது. சிங்கப்பூர் அதிபராக தருமன் […]
பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின் போனில் பேச்சு

பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் பேசியதாக பிரதமர் அலுவலக வட்டார செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இருவரும் செப்.,9, 10 தேதிகளில் டில்லியில் நடக்கும் ஜி-20 மாநாடு தொடர்பாக விவாதித்தனர். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் வரமுடியவில்லை என்பதை தெரிவித்ததுடன், தனக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் ஜெர்ஜிலாவ்ரோவ் பங்கேற்பார் என்றும் கூறினார். சமீபத்திய பிரிக்ஸ் மாநாடு, சர்வதேச அளவிலான பிரச்னைகளையும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திராயன் – 3 இறங்கிய இடத்திற்கு சிவசக்தி எனபெயர் சூட்டிய மோடி

இந்திய விண்கலம் சந்திராயன் -3 நிலவில் இறங்கி சாதனை படைத்து உள்ளது. நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் செயற்கைக்கோளின் லேண்டர் இறங்கிய இடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சிவசக்தி முனை என்று பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தார். நேற்று அவர் பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்தபோது இந்த பெயரை சூட்டினார். இதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் சந்திராயன் 2- இறங்கிய இடத்திற்கு திரங்கா (மூவர்ண கொடி) என்று மோடி பெயர் சூட்டியுள்ளார்.
“ஊழலை பற்றி பேச பிரதமர் மோடிக்கு என்ன அருகதை இருக்கு..?”

பாஜக அரசின் ஊழல் பட்டியலை அம்பலப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவாரூர் மாவட்டம் பவித்திரமாணிக்கத்தில் நடைபெற்ற நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர்திரு.எம்.செல்வராஜ் அவர்களது இல்லத் திருமண விழாவுக்குத் தலைமையேற்று ஆற்றிய உரையின் விவரம் வருமாறு🎙️பி.ஜே.பி. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டைக் காப்பாற்றிவிட்டோம். இந்தியாவைக் காப்பாற்றும் நிலைக்கு நாம் இப்போது வந்திருக்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றுவதற்காகத்தான் ‘இந்தியா’ கூட்டணி அமைந்திருக்கிறது. பீகார் மாநிலத்தில், நிதிஷ் குமார் அவர்கள் தலைமையில் கூடி எதிர்க்கட்சியில் எல்லாம் ஒன்று […]