குஜராத்: சர்தர் வல்லபாய் படேல் பிறந்தநாளை ஒட்டி நடைபெறும் தேசிய ஒற்றுமை தின விழா கொண்டாட்டத்தை கண்டு களிக்கும் பிரதமர் மோடி
தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இருந்து அகமதாபாதிற்கு நீராவி ரயில் போக்குவரத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
தேவரின் பணிகள் தேசத்தின் வளர்ச்சிக்கு ஒளியேற்றுகிறது: பிரதமர் மோடி புகழஞ்சலி

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் புனித குருபூஜையை முன்னிட்டு அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம். சமூக மேம்பாட்டில் ஆழமாக வேரூன்றி இருந்த அவரது அரும்பணிகள், விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திய அவரது ஆன்மீகப் பாதை, தேசத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒளியேற்றுகிறது. காலத்தால் அழியாத அவரது கொள்கைகள் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழும்” என எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மணிக்கு சுமார் 180 கி.மீ வேகத்தில் இயங்கும் நாட்டின் முதல் ரேபிட் ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

இது குறைந்த தொலைவில் உள்ள நகரங்களை இணைக்க உருவாக்கப்பட்டுள்ளது
நாட்றம்பள்ளி அருகே விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூபாய் 2 லட்சம், பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மிழக அரசு சார்பில் இறந்தவர்களுக்கு தலா ரூ 1 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரம் அறிவிப்பு. வாணியம்பாடி,செப்.11- வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஓணாங்குட்டை கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கடந்த 8 ஆம் தேதி 2 வேன்களில் கர்நாடக மாநிலம் தர்மஸ்சாலாவுக்கு சுற்றுல்லா சென்று இன்று காலை சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வேன் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதி பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து […]
டெல்லியில் நடைபெறும் G20 மாநாட்டில் பிரதமர் மோடி உரை

ஆப்பிரிக்க ஒன்றியத்தை நிரந்தர ஜி20 உறுப்பினராக்க இந்தியா முன்வந்துள்ளது; அனைத்து உறுப்பினர்களும் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்”
மொராக்கோ நாட்டில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிக்கிறது: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: மொராக்கோ நாட்டில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். இக்கட்டான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே எங்களது நாட்டின் கொள்கை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வளமான எதிர்காலத்திற்காக ஜி20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை நாம் உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார். போரினால் உலகளவில் இழந்துள்ள நம்பகத்தன்மையை மீட்டெடுக்க அழைப்பு விடுக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது என ஜி20 நாடுகள் தொடக்க நிகழ்வில் பிரதமர் பேசினார். […]
ஜி 20 அமைப்பில் நிரந்தர உறுப்பினரானது ஆப்பிரிக்க யூனியன்

பிரதமர் மோடி முன்மொழிந்த நிலையில் ஜி 20 மாநாட்டில் அறிவிப்பு. ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டதால் ஜி 20 அமைப்பு ஜி 21 அமைப்பாக மாறுகிறது.
ஜி-20 மாநாட்டிற்கு வருகை தரும் தலைவர்களை பிரதமர் வரவேற்றார்

நடைபெறவுள்ள ஜி 20 உச்சிமாநாட்டிற்கு வருகை தரும் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்துள்ளார். மொரீஷியஸ் பிரதமரை வரவேற்று மோடி வெளியிட்டுள்ள பதிவு வருமாறு,“எனது நண்பர் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத்தை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். இன்று எங்கள் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்றார். சர்வதேச நிதியத்தின் மேலாண்மை இயக்குநரை வரவேற்று, பிரதமர் கூறியிருப்பதாவது,“கிறிஸ்டாலினா ஜார்ஜீவா கூறியிருப்பதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன், நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது காலத்தின் நெருக்கடியான சவால்களைத் தணித்து, நமது இளைஞர்களுக்கு ஒரு […]