சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் ஒன்றிய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இரு மாநிலங்களிலும் புதிய அமைச்சரவையும் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியை I.N.D.I.A கூட்டணியில் உள்ள மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அண்மையில் மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியளிப்பதை நிறுத்திவிட்டதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் மேற்கு வங்கத்துக்கான நிதியை பகிர்ந்தளிப்பது தொடர்பாக பேச மம்தா பானர்ஜி நேரம் கேட்டிருந்தாராம். அதற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை மக்களுக்கு மோடி எந்த உதவியும் செய்வார் மத்திய மந்திரி உறுதி

புயல் வெள்ளம் பாதித்த செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர், வண்டலூர் வெளிவட்ட சாலை அடையாறு கடக்குமிடம், காஞ்சிபுரம் வரதராஜபுரம், ராயப்பாநகர், பிடிசி காலணி உள்ளிட்ட பகுதிகளை ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீ ராஜீவ் சந்திரசேகர் , மாவட்ட ஆட்சியர்கள் ராகுல்நாத் மற்றும் நீர்வளம், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டார். மேலும் பாதிப்பு புகைப்பட […]

“ரைடு விட்டால் நாங்கள் பயப்பட மாட்டோம்;

எங்கள் கிளை செயலாளர் கூட உங்களைப் பார்த்து பயப்படமாட்டான்; பிரதமர் நரேந்திர மோடிக்கு எப்பொழுதும் என் ஞாபகம் தான்; என்னைப் பற்றி ராஜஸ்தான் பிரச்சாரத்தில் மோடி பேசுகிறார்”

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சனாதனத்தை ஒழிக்க துடிக்கின்றது;

சனாதனத்தை ஒழிப்பது என்றால் ராஜஸ்தானின் கலாச்சாரத்தையே ஒழிப்பதாகும் – ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு. காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எதிரான மன நிலையில் இருக்கின்றது, பட்டியலின் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடைபெறும் போது கண்மூடி கொண்டிருக்கின்றது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் சனாதனத்தை ஒழிக்க விரும்புகின்றது; சனாதனத்தை ஒழிப்பது என்றால் ராஜஸ்தான் மாநிலத்தில் கலாச்சாரத்தையே […]

மேஜிக் செய்து குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டிய பிரதமர் மோடி!

எக்ஸ் சமூக வலைதளத்தில் ‛ குழந்தைகளுடன் குழந்தையாக மாறுகிறார் மோடி ‘ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பா.ஜ., வெளியிட்டது. அந்த வீடியோவில், சிறுவன் மற்றும் சிறுமி ஆகியோர் மோடியை சந்தித்து உள்ளனர். அப்போது, அவர்களின் காதை பிடித்து விளையாடிய மோடி, பிறகு அந்த குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டும் வகையில், காசு ஒன்றை வைத்து மேஜிக் செய்து காட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ, எப்போது, […]

வறுமையை ஒழித்து வருகிறது பாஜக – பிரதமர்

நாட்டில் வறுமையை பாஜக அரசு ஒழித்து வருகிறது; காங்கிரஸ் கட்சியிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏழைகளின் உரிமைகளை பறித்து பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்யும். நாடு, மாநில வளர்ச்சியைவிட காங்கிரஸ் கட்சிக்கு தன் சொந்த நலன் மட்டுமே முக்கியம் -மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடி பேச்சு.

பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் மாதம் தமிழகம் வருகிறார். மேலும் சில நிகழ்ச்சிகள் கலந்துக் கொள்ள இருப்பதாகவும் தெரிய வருகிறது

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழ்நாடு வர திட்டமிட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறப்படுகிறது. ராமேஸ்வரம் பாம்பன் பால பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவிற்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.