ராக்கெட் ஏவுதளம் – அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்.!

வரும் 28ம் தேதி குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி. பாம்பன் பாலத்தின் திறப்பு விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

துறவி சிரோமணி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் மகராஜ் குறித்து பிரதமர் தமது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்

துறவி சிரோமணி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் மகராஜ் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். துறவி சிரோமணி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் மகராஜ் குறித்த தமது கட்டுரையின் இணைப்பை திரு மோடி narendramodi.in இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது,துறவி சிரோமணி ஆச்சார்யா ஸ்ரீ 108 வித்யாசாகர் மகராஜ் அவர்கள் குறித்து எனது எண்ணங்களை எழுதினேன், அவரது ஆசீர்வாதங்களை நான் பல ஆண்டுகளாகப் பெற்றேன், […]

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக வருகிற 27, 28 தமிழகம் வருகை..

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைஎன் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா திருப்பூர் பல்லடத்தில் 27ஆம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்28ஆம் தேதி தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுத்தளத்தின் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு திருநெல்வேலியில் நடக்கும் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி மற்றும் மாற்றுக் […]

சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லுவின் பின்னணியில் பிரதமர் மோடி உள்ளதாக ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லுவின் பின்னணியில் பிரதமர் மோடி உள்ளதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் ஜனநாயக படுகொலை, உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் வெளிவந்துள்ளது என ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

வரும் 27-ந்தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி…

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையை முடித்து வைக்கிறார். மேலும் பிப்ரவரி 28ஆம் தேதி குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவும் தளம் அடிக்கல் நாட்டு விழா. என தமிழகத்தில் 2 நாட்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்..

நாடு திரும்பினார் பிரதமர் மோடி; எய்ம்ஸ்-க்கு இன்று அடிக்கல்

யு.ஏ.இ., கத்தார் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு, டெல்லி திரும்பினார். பிரதமர் மோடி, ஹரியானாவில் 9,750 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்டங்களை இன்று துவங்கி வைக்கிறார். இதற்காக அம்மாநிலத்திற்கு செல்லும் மோடி, ரவேரியில் 1650 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள, எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் குருகிராம் மெட்ரோ ரயில் திட்டம் (ரூ.5,450 கோடி) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மோடி பதவி விலக வேண்டும்

பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அவர் X தளத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார். தேர்தல் பத்திரங்கள் என்பது மோடியின் மோசமான ஐடியா. அதன்மூலம் ஊழலுக்கு எதிரான பாஜகவின் கொள்கை கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது. ஆகையால் மோடி பதவி விலக வேண்டும்” என்று சுப்ரமணியசாமி போஸ்ட் செய்துள்ளார்.

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளபிரமாண்ட கோயில் கட்டுமானங்களைப் பார்வையிடும் பிரதமர் மோடி பூஜையிலும் கலந்து கொண்டு வழிபடுகிறார்.

முன்னாள் பிரதமர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் – பிரதமர் மோடி. பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர் மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோருக்கு இந்தாண்டுக்கான பாரத ரத்னா வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் 40 இடங்களில் கூட வெற்றி பெறாது. ராஜ்யசபாவில் பிரதமர் மோடி உரை..

பா.ஜ., 400 இடங்களில் வெற்றி பெற கார்கே ஆசி எனது குரலை எதிர்கட்சியினர் ஒடுக்க முடியாது;இந்திய நாட்டு மக்கள் பாஜகவின் பேச்சை கேட்க முடிவு செய்துள்ளனர்” “காங்கிரஸ் கட்சி இந்திய நாட்டை வடக்கு தெற்கு என பிரித்தாள நினைக்கிறது; காங்கிரசின் கொள்கைகளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை; எப்படி இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது இப்படி ஆகிவிட்டது”