தமிழக மக்களை பாஜக நேசிக்கிறது, திமுக வஞ்சிக்கிறது: மோடி

தமிழக மக்களை பாஜக தான் நேசிக்கிறது. திமுக – காங்கிரஸ் கட்சிகள் வஞ்சிக்கின்றன. திமுக – காங்கிரஸ் இந்தியா கூட்டணியால், மக்களுக்கு வளர்ச்சித்திட்டங்களைக் கொடுக்க முடியாது. குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும். கொள்ளையடிப்பதை இலக்காகக் கொண்டது திமுக கூட்டணி என்று பிரதமர் மோடி கூறினார்.
கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடிக்கு பாஜகவில் தனது கட்சியான சாமகவை இணைத்த சரத்குமார் இருகரம் கூப்பி வரவேற்றார்
பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்துடன் பிரதமர் மோடி பேச்சை தொடங்கினார்

என் அன்பான தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம் என மோடி பேச்சு நாட்டின் தென் கோடியான கன்னியாகுமரியில் இருந்து அலை கிளம்பியுள்ளது – மோடி இந்த அலை நீண்ட தூரம் பயணம் பயணிக்கப்போகிறது – மோடி 1991ல் கன்னியாகுமரி இருந்து காஷ்மீர் யாத்திரை சென்றேன் – மோடி இப்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்திருக்கிறேன் – மோடி தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி எடுபடாது – மோடி திமுக கூட்டணி ஆட்சியை அகற்றி பாஜக ஆட்சியை அமைப்போம் – […]
வடை சுடுவதாக மோடியை விமர்சிக்க டி.ஆர் பாலு எதிர்ப்பு

மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டத்தால் தமிழகத்தில் 75 சதவீகித வாக்களர்கள் பயணாளியாக உள்ளனர். ஆனால் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் மோடி உள்ளதால் திமுக தொண்டர்கள் வடையை காண்பித்து தங்களின் மன நிலை வெளிப்படுத்துகிறார்கள் தாம்பரத்தில் டி.ஆர்.பாலு பேச்சு:- தாம்பரத்தில் தமிழக முதலமைச்சர் 71வது பிறந்தநாள் நலத்திட்டம் வழங்கும் விழா, தமிழக நிதிநிலை அறிக்கை விளக்கப்பொது கூட்டம், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நடைபெற்றது. தொகுதி பார்வையாளர் மருதுகணேஷ், மண்டலகுழு தலைவர்கள் […]
100 முறை வந்தாலும் மோடி வெல்ல முடியாது

காலாவதியான எம்.எல்.ஏ களை கட்சியில் சேர்ந்துவிட்டு அண்ணமலை பகல் கனவு காண வேண்டாம். அதிமுக பலவீனமடைந்த நிலையில் 10 அல்ல 100 முறை தமிழகத்திற்கு மோடி வந்தாலும் கால்பதிக்கமுடியாது. வெள்ளத்தை சரியாக கையாண்டதாக மத்திய குழு தெரிவித்து சென்ற நிலையில் சல்லிகாசு கொடுக்காம குறையை மட்டும் மோடி சொல்கிறார் அப்துல்சமது பேச்சு:- சென்னையை அடுத்த பல்லாவரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் “வெல்லட்டும் இந்தியா” என்கிற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மமக பொதுச்செயலாளர், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் […]
பாஜகவுடன் தான் கூட்டணி – ஓபிஎஸ்

“பாஜகவுடன் தான் கூட்டணி என நிலைப்பாடு எடுத்துள்ளோம்” “மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம்”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

இன்று 71வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் -பிரதமர் மோடி.
அபுதாபியில் ஒரு பெரிய இந்து கோவிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

இந்தியாவின் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அபுதாபியில் ஒரு இந்து கோவிலும் கட்டப்பட்டுள்ளது. ரூ .700 கோடி செலவில் ஒரு பெரிய இந்து கோயில் கட்டப்பட்டது. பிரதமர் மோடி திறந்து வைத்த இந்தக் கோயில் இன்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.
தூத்துக்குடி: தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு பிரதமர் மோடியின் நிகழ்ச்சி தொடங்கியது

முதலில் தேசிய கீதமும், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்ட பின் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. இப்பகுதியில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி பூங்கா அமைக்கப்படுகிறது. குலசேகரப்பட்டினம், அமலாபுரம், எள்ளுவிளை, கூடல் நகர், அழகப்பபுரம், உள்ளிட்ட பல கிராமங்களில் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடந்தன.
உள்நாட்டு ஹைட்ரஜன் கப்பல், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் : ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்த பிரதமர் மோடி

கொச்சியில் நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் செல் உள்நாட்டு நீர்வழிக் கப்பலை பிரதமர் தொடங்கி வைத்தார். திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. குலசேகரப்பட்டினம் எவுதளம் ஆண்டிற்கு 24 ராக்கெட்டுகளை விண்ணிற்கு அனுப்பும் நிறனுடையது. தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிதுறைமுக சரக்கு பெட்டக முளையம் அமைக்க பிரதமர் அடிக்கல் நாட்டினார். ரூ.124.32 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை […]