நிலைமை மோசமாகும் முன் உடனடியாக கைவிட பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாகும் நடவடிக்கையை துணை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய ஆணையம் (NCAHP) எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவசரமான மற்றும் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என சாடியுள்ளார். நீட் தேர்வு எனும் தவறான நடைமுறையை துணை மருத்துவப் படிப்புகளுக்கும் விரிவுபடுத்துவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். எம்பிபிஎஸ் படிப்பிற்கு நீட் தேர்வை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வரும் […]

முதலில் சுட்டுவிட்டுதான் பேச்சுவார்த்தை!

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரர்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு வீரர்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவார்கள்; பிறகுதான் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று டென்மார்க் எச்சரித்துள்ளது. கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டம் தீட்டி வரும் நிலையில், அத்தீவை நிர்வகிக்கும் டென்மார்க் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

டெல்லி:டெல்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷனில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் காலை ஆராதனையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். கிறிஸ்துமஸ் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை குறிப்பதுடன் நம்பிக்கை, அமைதி, மன்னிப்பு, அன்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தி கதீட்ரல் ஆஃப் ரிடம்ஷன் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில் உள்ள […]

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடி ஹெலிகாப்டர்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள தாஹேர்பூர் ஹெலிபேடில் பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டர் இன்று (டிச.20) அப்பகுதியில் நிலவிய அடர்ந்த மூடுபனியால் ஏற்பட்ட காட்சித் தெளிவின்மை காரணமாக தரையிறங்க முடியாமல் கொல்கத்தாவுக்கு திரும்பியது. இன்று காலையில் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தாஹேர்பூர் ஹெலிபேட் தளத்தின் மீது சிறிது நேரம் வட்டமிட்ட பிறகு, யூ-டர்ன் அடித்து கொல்கத்தா விமான நிலையத்துக்கே திரும்பியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின் மோடிக்கு…

ஓமன் நாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு நாட்டின் உயரிய விருதான ‘ஓமனின் முதல்தர விருது (The First Class of the Order of Oman – தி ஃப்ர்ஸ்ட் கிளாஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஓமன்) வழங்கி மன்னர் சுல்தான் ஹைதம் பின் தாரிக் கௌரவப்படுத்தினார். இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 29 ஆவது வெளிநாடுகளின் உயரிய விருதாகும். மேலும், ராணி எலிசபெத், நெதர்லாந்து ராணி மாக்ஸிமா, நெல்சன் மண்டேலா, பேரரசர் […]

இந்தியா உடன் ராணுவ உறவை வலுப்படுத்திய ரஷ்யா!

இந்தியா – ரஷ்யா இடையே ராணுவப் படைகளை பரிமாறிக்கொள்ளும் RELOS ஒப்பந்தத்தை அங்கீகரித்து ரஷ்ய நாடாளுமன்றம் நிறைவேற்றிய கூட்டாட்சி சட்டத்தில் கையெழுத்திட்டார் ரஷ்ய அதிபர் புதின்! இதன் மூலம் ரஷ்யாவின் வீரர்கள், போர்க்கப்பல்கள், போர் விமானங்களை இந்தியாவிற்கு அனுப்புவதற்கும், அதேபோல் இந்தியாவின் படைகள் ரஷ்யா செல்வதற்கும் வழிவகை செய்கிறது. ராணுவப் பயிற்சி, பேரிடர் பணிகள் மற்றும் பிற சந்தர்ப்பங்களிலும் இந்த ஒப்பந்தம் பயன்படுத்தப்படும் என அறிவிப்பு.

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!

சென்னை பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொங்கல் கொண்டாட தமிழகம் வரும் மோடி.

தமிழகத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை விவசாயிகளுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக அவர் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக வரவுள்ளார் அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான பிரச்சார முன்னோட்டம் தான் இந்த நிகழ்ச்சி என கூறப்படுகிறது.

ஜோர்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி.

3 நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து ஜோர்டான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று(டிச.15) முதல் டிச.18 வரை ஓமன், ஜோர்டான், எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி.

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற மகளிர் கிரிக்கெட் அணி

நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது இதனைத் தொடர்ந்து ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி. நேற்று உலகக் கோப்பையுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்