தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு 10 வழித்தடங்களுக்கு மாநகர பேரூந்துகளை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கொடியசைத்து துவக்கிவைத்தார்

தாம்பரம் பேரூந்து நிலையத்தில் இருந்து மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 10 புதிய வழித்தடத்தில் மாநகர பேரூந்துகளை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கொடியசைத்து துவக்கிவைத்தார், பின்னர் பொதுமக்களுடன் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா,தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மண்டலகுழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன் ஆகியோர் சிறிது தூரம் பயணம் மேற்கொண்டனர்.
தாம்பரத்தில் திமுகவினருக்கு தங்கம், வெள்ளி நாணயம் பரிசு

மறைந்த முன்னாள் நகர துணை செயலாளர் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகள், தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய திமுகவினர் 30 பேரில் 9 தங்கம், 21 வெள்ளி நாணயங்களை வழங்கினார். மறைந்த முன்னாள் நகர துணை செயலாளர் திருமதி.சுப்புலட்சுமி சர்தார் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, அவரது மகனும் மாநகர துணை அமைப்பாளர் ச.ராஜேஷ் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்சி நடைபெற்று, சிறப்பு அழைப்பாளராக […]
சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்

முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு பதிலளிக்க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு.
சென்னை ராஜரத்தினம் அரங்கத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது

எடப்பாடி பழனிச்சாமி தலைமயைில் கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி பற்றி சட்டசபையில் பேச அனுமதி வழங்காததை கண்டித்து உண்ணாவிரதம் காலை 9 மணிக்கு தொடங்கி உள்ள உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது அதிமுக எம்எல்ஏக்கள் நடப்பு சட்டசபை தொடர் முழுவதும் பங்கேற்க நேற்று தடை விதிக்கப்பட்டதால் உண்ணாவிரதம்
“சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பேசும் போது யாரும் குறுக்கிட கூடாது என்பது மரபு, ஆனால் சட்டப்பேரவையில் அமைச்சர்கள் பேசும் போது கூட சபாநாயகர் அப்பாவு குறுக்கீடு செய்கிறார்;
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் எந்த தீர்மானத்திற்கும் ஒப்புதல் கிடைத்ததில்லை; அதுபோன்று சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்திற்கும் அனுமதி வழங்கப்படாது; சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க காலம் தாழ்த்துவதற்காக தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது; உண்மையில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்றால் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டும் ” -சட்டப்பேரவை வளாக்கத்தில் சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் பேட்டி
தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
எம்.எல்.ஏ.,வாக பதவியேற்ற அடுத்த நாளே கனத்த இதயத்துடன் ராஜினாமா செய்கிறேன்.

சிக்கிம் முதல்வரின் மனைவி பரபரப்பு அறிவிப்பு!
ஒடிசா மாநிலத்தில் முதல்வராக பாஜக எம்எல்ஏ மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்பு

இன்று மாலை 5 மணிக்கு ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி ஒடிசா முதல்வராக பொறுப்பேற்கிறார். ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதாதளம் கட்சியை பாஜக வீழ்த்தியது. மோகன் சரண் மாஜியின் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
ஓ.பி.எஸ். அணியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ.ஜே.சி.டி.பிரபாகரன் விலகுவதாக அறிவிப்பு

பெங்களூரு புகழேந்தி, முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி ஆகியோர் ஓ.பி.எஸ் ஆதரவு நிலையில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு.
முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான குட்கா வழக்கை

எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற சிபிஐ கூடுதல் சிறப்பு நீதிமன்றம் சிபிஐ முதன்மை நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்துள்ளது