முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் தலைமையில்

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் என்.மாரப்பன், பொருளாளர் கே.முரளிபாபு, செயலாளர் பி.கார்த்திகேயன், மண்டல செயலாளர்கள் எஸ்.பாலமுருகன், டி.பழனிச்சாமி, கே.ரமேஷ், நாமக்கல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.அய்யாவு, வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு துணைத் தலைவர் எஸ்.கே.ஆடம், அம்பத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஏ.லட்சுமி ராஜ்ரத்தினம், விழுப்புரம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எம்.காளிதாஸ் ஆகியோர் சந்தித்து, ஒன்றிய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து ஒன்றிய […]

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில், நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி & நிகோலாய் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு

மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். உடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உள்ளனர்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், 5 புதிய அதிநவீன சொகுசு பேருந்து சேவை

5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட அதிநவீன பேருந்துகள்

தமிழ்நாடு முதவமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில்,

2024 & 2025ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைமானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (29.06.2024) சனிக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையில் 85 தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் 48 வேளாண்மை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.

எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி

“தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம்” என ராகுல் காந்தி பதிவு

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்- முதல்வர்

ஓசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 40 க்கு 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றிபெற்றதையொட்டி,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.