கலைஞர் நூற்றாண்டு நினைவு ₹100 நாணயம் வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்க உள்ளது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இவ்விழாவில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார். எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் 6-வது ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

இந்நிகழ்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு மீனவர் பிரச்சனைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி

புதுதில்லியில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களை, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் மற்றும் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களின் தலைமையில், மீன்வளம் & மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, ராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் கா.நவாஸ் கனி, தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் […]

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் கொளத்தூர், வீனஸ் நகரில் 19 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கழிவுநீர் வெளியேற்று நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

இந்த ஆய்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, அ.வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு. மகேஷ் குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரர், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், நகர் ஊரமைப்பு இயக்குநர் […]

சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிமைக்குழு விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

கடந்த அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கடந்த 2017ம் ஆண்டு அதிமுக-வில் பன்னீர்செல்வம் அணியினர் உருவானது, 18 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு […]

சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்

முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு பதிலளிக்க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு.

மத்தியபட்ஜெட் 2024-25 முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்திற்கு இந்த பட்ஜெட்டில் நிதி இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அது ஒரு கவலைக்குரிய விஷயம். அதற்கு பதிலடியாக வரும் 27ஆம் தேதி டெல்லியில் நடக்க இருக்கும் நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன்! என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது அரசியல் நோக்கில்சரியாக படவில்லை. அப்படி இல்லாமல் காமராஜர் காலத்தில் திட்டமிடப்பட்டு அண்ணா காலத்திலும் நிறைவேற்றப்படாமல் இருந்த சேலம் இரும்பு உருக்காலை திட்டத்திற்கு அனுமதி கேட்டபோது கலைஞர் டெல்லியில் இருந்தார். அப்போதும் இந்த உருகாலைத் திட்டத்திற்கு […]

“பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணிக்கிறது”- சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழ்நாடு என்ற சொல்லே, மத்திய அரசு பட்ஜெட்டில் இல்லை என்று சொல்வதை விட மத்திய அரசின் சிந்தனை மற்றும் செயல்களில் தமிழ்நாடே இல்லை. மைனாரிட்டி பாஜகவை, மெஜாரிட்டி பாஜகவாக உருவாக்கிய சில மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு திட்டங்களை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது. 3வது முறையாக வாக்களித்த மக்களுக்கு பாஜக அரசு எதையும் செய்யவில்லை.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது

கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.