மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (27.9.2024) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்து,

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்திட தேவையான ஒன்றிய அரசின் நிதி, சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார். இச்சந்திப்பின்போது, கழக மக்களவை குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு, கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமதி கனிமொழி, தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தடம் பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நெல்லையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடையை பரிசளித்தார் முதலமைச்சர். மேலும் பனை ஓலை ஸ்டாண்ட், டெரகோட்டா சிற்பங்கள், பித்தளை விளக்கு, நீலகிரி தோடா எம்பிராய்டரி சால், பவானி ஜமுக்காளத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசளித்தார்.
டெல்லியில் பிரதமர் உடனான சந்திப்புக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு.

தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியுடன் அளித்துள்ளேன் சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகள் மத்திய- மாநில அரசுகளின் கூட்டாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு அறிவிப்பு வெளியானது. எனினும், இதுவரை நிதி வழங்கப்படவில்லை. உரிய நிதிப்பங்கீடு அளிக்காததால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் புதிய அரசு அமைந்துள்ளதால் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டேன்.
மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களை சந்திப்பதற்காக புதுதில்லி வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களை சந்திப்பதற்காக புதுதில்லி வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை புதுதில்லி விமான நிலையத்தில், கழக மக்களவை குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு, மக்களவை மற்றும் மாநிலங்களவை குழுத் தலைவர் திருமதி கனிமொழி, உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ஏ.கே.எஸ். விஜயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் […]
செந்தில் பாலாஜிக்கு ஜாமின்- நாட்டுக்கு தியாகம் செய்ததைபோல் சித்தரிக்க முயலும் மு.க.ஸ்டாலின்: தமிழிசை

செந்தில் பாலாஜி மீது பல்வேறு ஊழல் புகார்களை கூறியதே தி.மு.க.தான். ஜாமீனுக்கும், விடுதலைக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் கொண்டாடி மகிழ்கிறீர்களே
இரண்டு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விமான நிலையத்தில் முக்கிய அமைச்சர்கள், பிரமுகர்கள் வழியனுப்பி வைத்தனர்.
தமிழக அமைச்சரவையில் புதிதாக 2 இளம் அமைச்சர்கள்?

மூத்த அமைச்சர்கள் இரண்டு பேர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்களுடன் தமிழக அமைச்சரவை இயங்கி வருகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று முன்தினம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் நடைபெறும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமான பணிகளை […]
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர், ஜி.கே.எம். காலனி 12&வது தெருவில்

பெருநகர சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்து, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு புத்தகப்பை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, மாண்புமிகு இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.பி.வில்சன், திரு.கலாநிதி வீராசாமி, திரு.ஆர்.கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தாயகம் கவி, திரு. ஜோசப் சாமுவேல், துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் […]
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர், ஜி.கே.எம். காலனி 12&வது தெருவில்

பெருநகர சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு சிங்கார சென்னை 2.0 நிதியின் கீழ் 2 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட தரைத்தளம் மற்றும் முதல் தளம், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பி.வில்சன் அவர்களின் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடியே 80 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இரண்டாம் தளம், என மொத்தம் 4 கோடியே 23 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தை திறந்து வைததார். இந்நிகழ்வின்போது,மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் […]
நான்கு முறை குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்ற முதல்வர் ஸ்டாலின் குறைந்த முதலீடுகளையே கொண்டு வந்துள்ளார்

தொழில் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.