மிக்ஜாம் புயல் மழை பாதிப்பால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு .
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், […]
மின்சார சப்ளை கொடுக்கபோலிஸ் பாதுகாப்புடன் செல்லும் மின்சார ஊழியர்கள்.

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் புயல் வெள்ளம் பாதிப்பு கடுமையாக உள்ளது.குறிப்பாக முடிச்சூர் வரதராஜபுரம் போன்ற பகுதிகளை அடக்கிய மேற்கு தாம்பரம் தொடர்ந்து வெள்ளத்தில் தத்தளிக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்பட்டபோது முடிச்சூர் வரதராஜபுரம் பகுதிகளில் தண்ணீர் உள்ளே செல்ல முடியாமல் தேங்கி இருப்பதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதி ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளத்தில் தான் மூழ்கி தவிக்கிறது. காரணம் இந்த பகுதியில் ஏராளமான வீடுகள் ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. […]
4 மாநில தேர்தல் – முதல்வர் வாழ்த்து

தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து அனைத்து தரப்பு மக்களும் வளமுடன் திகழ, வளர்ச்சியை முன்னெடுக்கும் நல்லதொரு மாற்றமாக செயல்பட வாழ்த்துக்கள்
சென்னையில் வெள்ள நிவாரண பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

வரலாறு காணாத வெள்ளத்தை சந்தத்தபோதும் கடந்த காலத்தை ஒப்பிடும்போது பாதிப்பு குறைவாக உள்ளது. ▪️ 2015ம் ஒப்பிடும்போது தற்போது ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்டுள்ள மழையின் அளவு அதிகம். ▪️ சென்னையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும், தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. ▪️ 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 199 பேர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது அதைவிட அதிகமான மழை பெய்தும் 9 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த உயிரிழப்புகளும் […]
2015 ஆம் ஆண்டு ஏற்பட்டது செயற்கை வெள்ளம்; இம்முறை சென்னை எதிர்கொண்டது இயற்கை வெள்ளம்

சென்னையில் இயல்பு நிலை வெகு விரைவில் திரும்ப மீட்புப்பணி துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு பெய்த மழையின் அடிப்படையில் பணிகளை திட்டமிட்டோம். வரலாறு காணாத மழை பெய்த போதிலும், கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்த முறை பாதிப்பு குறைந்துள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்
மழை நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூ.5,000 கோடி கேட்க உள்ளோம்

4 நாட்களில் முழு நிவாரணமும் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் – ரூ.4,000 கோடியில் பணிகளை மேற்கொண்டோம்; அதனால்தான் சென்னையில் பாதிப்புகள் குறைவாக இருக்கின்றன” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமைச்சர் துரைமுருகனைஅவரது இல்லத்தில் சந்தித்து பேசிய தமிழக முதலமைச்சர்
தி.மு.கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு – மாநில உரிமை மீட்பு முழக்கமாக சேலத்தில் எதிர்வரும் 17-ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் – இந்திய ஒன்றியமே திரும்பிப் பார்க்கிற வகையில் நடைபெறவுள்ள, இந்தப் பெருமைக்குரிய மாநாட்டுக்கான அழைப்பிதழை கழகத்தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமும் – கழகப் பொதுச் செயலாளர் – மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்களிடமும் இன்று வழங்கி வாழ்த்துப் பெற்றோம். தி.மு.க. இளைஞர் அணிமாநில மாநாட்டின் வெற்றிச் செய்தி – எட்டுத்திக்கும் எதிரொலிக்கும் வகையில் செயலாற்றுவோம். பாசிசக் கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து மூடி – மாநில உரிமை மீட்போம்!
கனமழை எதிரொலி : சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சியின் முடிவு கண்டனத் திற்குரியது

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சுமார் 350 பள்ளிகளில் நாள்தோறும் 65ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானம் தமிழக முதலமைச்சரின் ஒப்புதலோடு தான் நிறைவேற்றப்பட்டதா ? ஒருவேளை முதலமைச்சரும் இத்தீர்மானத்திற்கு அனுமதி அளித்திருந்தால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் போக்குவரத்து துறை தொடங்கி அனைத்து துறைகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பதாக பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மை தானோ? என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே, […]