கருத்துரிமையின் கழுத்து நெரிப்பு – முதல்வர்

பெரியார் குறித்து திமுக எம்பி அப்துல்லா பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் “நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது” வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும், பெரியாரின் பெயரை எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம் – முதல்வர் ஸ்டாலின்ட்வீட்

கருத்துரிமையின் கழுத்து நெரிப்பு – முதல்வர்

பெரியார் குறித்து திமுக எம்பி அப்துல்லா பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் “நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது” வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும், பெரியாரின் பெயரை எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம் – முதல்வர் ஸ்டாலின்ட்வீட்

சென்னை வெள்ளம் ரேஷன் கார்டுக்கு ரூபாய் 6000 வழங்க ஸ்டாலின் உத்தரவு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.வெள்ள சேதம் குறித்தும், வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இதனடிப்படையில், மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, […]

முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ (7.12.2023) அனகாபுத்தூர்‌ பகுதியில்‌ “மிக்ஜாம்‌’ புயலினால்‌ ஏற்பட்ட கனமழையால்‌ பாதிக்கப்பட்ட மக்களுக்கு

உணவு வழங்கி, அரிசி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப்‌ பொருட்களையும்‌ வழங்கினார்‌. உடன்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌, தா.மோ.அன்பரசன்‌, உணவு மற்றும்‌ உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ அர.சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ எஸ்‌.ஆர்‌.ராஜா, இ.கருணாநிதி, வீட்டுவசதி மற்றும்‌ நகர்ப்புற வளர்ச்சித்‌ துறை செயலாளர்‌ சி.சமயமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ஆ.ர.ராகுல்நாத்‌, தாம்பரம்‌ மாநகராட்சி மேயர்‌ கே.வசந்தகுமாரி, துணை மேயர்‌ ஜி.காமராஜ்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

சென்னை உள்பட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்

வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பார்வையிடவுள்ளனர். புயல் பாதிப்புகளை சீரமைக்க மத்திய அரசு ரூ.5,600 கோடி வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

மீட்பு பணிகளை துரிதப்படுத்த கூடுதல் அமைச்சர்கள் நியமனம்…!

‘மிக்ஜாம்’ புயல் நிவாரண பணிகள் – கூடுதல் அமைச்சர்கள் நியமனம் ரகுபதி (சட்டத்துறை) – கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர் சிவ.வீ. மெய்யநாதன் (சுற்றுச்சூழல்துறை) – செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ராஜகண்ணப்பன் (பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை) -ராயபுரம் அன்பில் மகேஸ் பொய்யாமொழி (பள்ளிக்கல்வித்துறை) – வில்லிவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், அரும்பாக்கம் மீட்புபணிகளை ஒருக்கிணைத்து வரும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுடன் சமூகவலைத் தளங்களில் வரும் கோரிக்கைகளை ஒருக்கிணைத்து மீட்புபணிகளை மேற்கொள்ள தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நியமனம் அமைச்சர் மதிவேந்தன் […]

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் 18ம் தேதி வரை கால அவகாசம் : அமைச்சர் தங்கம் தென்னரசு!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் 18ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் பாதித்த 4 மாவட்டங்களிலும் அபராதம் இன்றி மின்சாரம் செலுத்தலாம் என்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தாம்பரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்..!!

தாம்பரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. குமரன் நகர், சி.டி.ஓ. காலனி, எஃப்.சி.ஐ. நகர், மூவேந்தர் நகரில் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (05-12-2023) மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம்’ தீவிர புயல்’ தெற்கு ஆந்திரா கடற்கரையை தெற்கு பாபட்லாவிற்கு அருகே நண்பகல் 1230 -1430 மணி அளவில் கடந்தது. இந்த சூழலில் தமிழகத்தில் […]