மழை பாதிப்பு – முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
சென்னை, எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு தென் மாவட்டங்களில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக முதல்வர் ஆய்வு மழை பாதிப்புகள் குறித்து, அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை ஆலோசனையில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் பங்கேற்பு 4 மாவட்டங்களுக்கான சிறப்பு அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தென் மாவட்டங்களில் அதி கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு
முதல்வர் தென் தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும்

இந்தநேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்க வேண்டிய இடம் தென் தமிழகம். ஆனால், முதல்வர் I.N.D.I.A கூட்டணி கூட்டத்திற்காக டெல்லி சென்றுள்ளார். ஹெலிகாப்டரில் இருந்து மீட்புப்படை வரை இங்கு வேலை செய்கிறார்கள். முதலமைச்சர் எங்கு சென்றார்- நெல்லையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
தென் மாவட்டங்களில் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக ₹2000/- கோடியை அவசர நிதியாக வழங்க வேண்டும்

டெல்லியில், பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்.வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள ₹.12,659 கோடியை விடுவிக்க வேண்டும். – பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ₹.2000 கோடியை விடுவிக்க வேண்டும். தற்காலிகமாக ₹.7033 கோடியை வழங்க வேண்டும் – – வெள்ள பாதிப்பாக ₹.12,659 கோடி வழங்குமாறு பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை
உள்துறை செயலாளர் அமுதா செய்தியாளர் சந்திப்பு

மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ₹9 லட்சம் மதிப்புள்ள உணவு பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ▪️ கன்னியாகுமாரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு 49,000 போர்வைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. ▪️ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை

தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதிகனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் பெருமக்கள், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோருடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை.
கோவையில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியை துவக்கி வைத்த தமிழக முதல்வர்…
முதல்வர் – கவர்னர் ஒரே விமானத்தில்!

இன்று காலை 8.20 மணி விமானத்தில் கோவை சென்றார் முதல்வர். அதே விமானத்தில் கவர்னர் ரவியும் சென்றார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை

அண்மையில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இருந்து திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் திமுக எம்பிக்களை முதல்வர் மு க ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆவின் பால் கொள்முதல் விலையை ₹3 உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ₹35ல் இருந்து ₹38-ஆக உயர்வுஎருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ₹44ல் இருந்து ₹47-ஆக உயர்வுகொள்முதல் விலை உயர்வு மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை