முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ (25.12.2023) முகாம்‌ அலுவலகத்தில்‌, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்‌ சந்தித்து, மிக்ஜாம்‌ புயல்‌ பேரிடர்‌ நிவாரணப்‌ பணிகளுக்காக முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதிக்கு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்‌ அறக்கட்டளை சார்பில்‌ 5 இலட்சம்‌ ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்‌. உடன்‌ இந்து சமயம்‌ மற்றும்‌ அறநிலையங்கள்‌ துறை அமைச்சர்‌ பி.கே. சேகர்பாபு உள்ளார்

தென் மாவட்டங்களுக்கான வெள்ள நிவாரணத்தை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நெல்லை, தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிவாரணம் தென்காசி, கன்னியாகுமரியில் பாதிப்புகளின் அடிப்படையில் நிவாரணம் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 நிவாரணம் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு இழப்பீடு தொகை ரூ10,000 ஆக உயர்வு

உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கியதற்கு ஆளுநர் ஒப்புதல்

ராஜகண்ணப்பன் கவனித்து வந்த காதி மற்றும் கிராம தொழில் வாரியம் அமைச்சர் காந்திக்கு கூடுதலாக ஒதுக்கீடு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

அந்தோணியார்புரம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

மத்திய சிறையில் தனி கட்டிடம் தேவைப்படும்: அண்ணாமலை கருத்து

மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் திரு செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் திரு பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார். திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், திரு @mkstalin அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் […]

உயர்கல்வித்துறை அமைச்சராக ராஜ.கண்ணப்பன்- முதல்வர் அறிவிப்பு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு தொடர்பான வழக்கில், 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் பொன்முடி பதவி இழந்தார். இதைத் தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ. கண்ணப்பனுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு- முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு கடிதம்.

தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றார் முதல்வர்

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு செல்லும் முதல்வர் இன்று ஆய்வு செய்கிறார்.