தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.

தமிழ்நாட்டில் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. ஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேருக்கு பதவி உயர்வு அளித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவு. சென்னை மேற்கு பகுதி இணை ஆணையராக விஜயகுமார் ஐபிஎஸ் நியமனம். விருதுநகர் மாவட்ட எஸ்பியாக ஃபெரோஸ் கான் அப்துல்லா நியமனம். ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக சந்தீஸ் நியமனம்.ராமநாதபுரம் எஸ்.பி தங்கதுரை கிருஷ்ணகிரி எஸ்.பியாக பணியிடமாற்றம். மதுரை எஸ்.பி சிவபிரசாத் தேனி எஸ்.பியாக பணியிட மாற்றம். தேனி எஸ்.பி டோங்கரே […]
எல்ஜி-யின் புதிய இரண்டுசக்கர வீட்டு ரோபோட்!

தென்கொரியாவை தலைமையகமாகக் கொண்ட நிறுவனமான எல்ஜி, வரும் சிஇஎஸ் 2024 தொழில்நுட்ப மாநாட்டில் தனது புதிய செய்யறிவு ரோபோவை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த புதிய ரோபோட் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, வீட்டில் உள்ள சின்னச் சின்ன வேலைகளை செய்யும் திறன்கொண்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டிற்குள் உலாவி விளக்குகளை, மின் விசிறிகளை அணைத்தல், செல்லப் பிராணிகளைப் பார்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை செய்யும் திறன்கொண்டது. மேலும், வீட்டின் நேரடி காணொலிகளை பார்க்க உதவுதல், வீட்டில் ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் உரிமையாளர்களைத் தொடர்புகொள்ளுதல் போன்றவற்றை சிறப்பாகச் செய்யும் […]
தமிழக பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலரை எட்ட ஹூண்டாய் உறுதுணையாக இருக்கும்: உன்சூ கிம் உறுதி.

2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகம் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலா் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாறுவதற்கு ஹூண்டாய் நிறுவனம் உறுதுணையாக இருக்கும் என அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உன்சூ கிம் தெரிவித்தார்
தமிழ்நாட்டில் முதலீடுகளை குவிக்கும் நிறுவனங்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் .

உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனங்கள் விவரங்கள் வருமாறு:- டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கிருஷ்ணகிரியில் உள்ள தங்கள் எலக்ட்ரானிக் உற்பத்தி ஆலையை 12 ஆயிரத்து 82 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் […]
தமிழ்நாட்டில் ரூ.35 ஆயிரம் கோடி ஜியோ முதலீடு: முகேஷ் அம்பானி

தமிழ்நாட்டில் ஜியோ நிறுவனம் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது என்று ரிலையன்ஸ் குழுமம் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் 2 நாள்கள் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடக்கிவைத்தார். இம்மாநாட்டில் 50 நாடுகளைச் சோ்ந்த தொழில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் காணொலி வாயிலாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது, தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. […]
இந்தியாவிலேயே பெண்களுக்கான சிறந்த நகரங்கள் சென்னை, திருச்சி: ஆய்வில் தகவல்

2023-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே பெண்களுக்கான 10 சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை மற்றும் திருச்சி வெவ்வேறு பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. தனியார் நிறுவனமான அவதார் குழுமத்தின் சார்பில், இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த 10 நகரங்கள் – 2023 என்ற அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு, மக்கள் அளித்த மதிப்பெண்களின்படி வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கென, 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களை ஒரு பிரிவாகவும், 10 லட்சத்துக்கும் குறைவான நகரங்களை ஒரு பிரிவாகவும் கொண்டு […]
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, கிழக்கு தாம்பரம், சேலையூர் பகுதியில் மூலதன மானிய நிதி 2021-2022 கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்

அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் அழகுமீனா, தலைமையில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் மண்டலக்குழு தலைவர்கள்சு.இந்திரன், திரு.து.காமராஜ், ச.ஜெயபிரதீப், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்- முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பச்சரிசி சர்க்கரை கரும்புடன் ரூ. 1000 வழங்கப்படும்-முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இயங்க தொடங்கியது

சென்னை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிதாய் கட்டபட்டுள்ள நவீன பேருந்த நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்ததோடு கொடியசைத்து பேருந்து சேவைகளை துவக்கி வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி 2310 அரசு பேருந்துகளும் 840 ஆம்னி பேருந்துகளும் தென் மாவட்டங்களுக்கு செல்லகூடிய வகையில் இயக்கபட உள்ளதோடு புறநகர் பேருந்துகளும் இயக்கபடுகின்றது. மருத்துவமனை, புற காவல் நிலையம், நகரும் படிக்கட்டு, ஓய்வறை, மின் தூக்கி, வனிக மையங்கள், உணவகம், பெரியளவிலான வாகன நிருத்தம் […]
தாம்பரத்தில் ஸ்டாலினுக்கு திமுக பிரம்மாண்ட வரவேற்பு

வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் பிரமாண்ட பேரூந்து முனையம் அமைக்கப்பட்ட நிலையில் அதன் திறப்பு விழாவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜி.எஸ்.டி சாலை வழியாக சென்றார். தாம்பரத்தில் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் திமுகவினர் தண்டே மேளம் முழங்க கருப்பு சிவப்பு பலுன்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். மண்டலகுழு தலைதலைவர்கள் காமராஜ், இந்திரன், ஜெயபிரதீப் சந்திரன், ஊராட்சிமன்ற தலைவர்கள் ஜனனிசுரேஷ், வேல்முருகன், கவுன்சிலர்கள் ஜெகன், சுரேஷ், உள்ளிட்டவர்களும் முதலமைச்சருக்கு பூங்கொத்து, சால்வைகள், புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர். […]