தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ சென்னை வர்த்தக மையத்தில்‌ நடைபெற்ற “உலக முதலீட்டாளர்கள்‌ மாநாடு 2024 நிறைவு விழாவில்‌, பெரம்பலூர்‌ மாவட்டத்தில்‌ அமைக்கப்படவுள்ள Zhong Bu நிறுவனத்தின்‌ தோல்‌ அல்லாத காலணி உற்பத்தி பொருட்கள்‌ தொழிற்சாலைக்கு அடிக்கல்‌ நாட்டினார்

இவ்விழாவில்‌, இங்கிலாந்து நாட்டு இணை அமைச்சர்‌ லார்டு தாரிக்‌ அகமது, குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன்‌, தொழில்‌, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்‌ வர்த்தகத்‌ துறை அமைச்சர்‌ ‌ டி.ஆர்‌.பி. ராஜா, அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா, தொழில்‌, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும்‌ வர்த்தகத்‌ துறை செயலாளர்‌ அருண்‌ ராய்‌, குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை செயலாளர்‌ அர்ச்சனா […]

தமிழ்நாடு முதலமைச்சர்‌ உத்தரவின்‌ பேரில்‌, தலைமைச்‌ செயலகத்தில்‌ போக்குவரத்துத்‌ துறை அமைச்சர்‌ சா.சி.சிவசங்கர்‌ தலைமையில்‌ 2024-ஆம்‌ ஆண்டு வரும்‌ பொங்கல்‌ திருநாளை முன்னிட்டு

போக்குவரத்துத்‌ துறையின்‌ சார்பில்‌ மேற்கொள்ளப்படும்‌ சிறப்பு ஏற்பாடுகள்‌ மற்றும்‌ சிறப்பு பேருந்துகள்‌ இயக்குவது குறித்து ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ போக்குவரத்துத்‌ துறை அரசு கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ க. பணீந்திரரெட்டி போக்குவரத்து மற்றும்‌ சாலை பாதுகாப்பு ஆணையர்‌ சண்முகசுந்தரம்‌ சென்னைப்‌ பெருநகர்‌ வளர்ச்சிக்‌ குழும உறுப்பினர்‌ செயலர்‌ அன்சுல்‌ மிஸ்ரா, மாநகர போக்குவரத்துக்‌ கழக மேலாண்‌ இயக்குநர்‌ டாக்டர்‌ ஆல்பி ஜான்‌ வர்கீஸ்‌, காவல்‌ துறை, போக்குவரத்துக்‌ கழக மேலாண்‌ இயக்குநர்கள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ […]

முதலீட்டாளர்கள் மாநாடு: 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதலீடுகள் மூலம்  நேரடி மற்றும் மறைமுமாக மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” நிறைவு விழாவில் பேசியது. எங்களுடைய அயராத உழைப்பு மற்றும் உங்களுடைய பங்களிப்பு காரணமாக, இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக, 6 […]

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா காங்கிரசில் இணைய சந்திரபாபுவின் சதியே காரணம்.

ஆந்திர மாநில அரசின் ஆலோசகர் சஜ்ஜலா ராமகிருஷ்ணா நேற்று விஜயவாடாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: முதல்வர் ஜெகன் மோகனை வழக்குகள் போட்டு துன்புறுத்தியது காங்கிரஸ் கட்சி. அதே கட்சியில் அவரது தங்கை ஷர்மிளா சேர்ந்துள்ளார்.ஒய்எஸ்ஆர் குடும்பத்திற்கு காங்கிரஸ் கட்சி பல பிரச்னைகளை ஏற்படுத்தியது மாநில மக்கள் அனைவருக்கும் தெரியும். இருப்பினும், ஷர்மிளா ஒரு கட்சியின் தலைவராக அவரது முடிவுகளை அவர் எடுத்துள்ளார். ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்ததன் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி […]

ஆந்திராவில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய குழுவினர் இன்று ஆந்திரா செல்கின்றனர்.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் அங்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஒன்றியத்தில் தற்போதுள்ள மோடி தலைமையிலான பாஜ அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும். இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணைய குழு களமிறங்கி உள்ளது. முந்தைய அறிவிப்பின்படி ஜன.7(நேற்று) முதல் […]

தமிழகத்தில் சுமார் 6 ஆயிரம் பேருந்துகள் ஓடவில்லை.

தமிழகம் முழுவதும் ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறையால் சுமார் 6 ஆயிரம் பேருந்துகள் ஓடவில்லை. சென்னையில் மட்டும் சுமார் 600 முதல் 900 பேருந்துகள் ஓடவில்லை. மேலும், கருணை அடிப்படையில் 13 ஆண்டுகளாக வாரிசுகளுக்கு பணி வழங்கப்படவில்லை – CITU சவுந்திரராஜன் தகவல்.

அதிமுக – பாஜக கூட்டணி இல்லை

வரும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் – ஈபிஎஸ்

டெல்லியில் 5ம் வகுப்பு வரை 5 நாட்களுக்கு விடுமுறை

டெல்லியில் நிலவும் குளிர் காரணமாக மழலையர் பள்ளிகள் முதல் 5ம் வகுப்பு வரை அடுத்த 5 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து டெல்லி மாநில அரசு உத்தரவு .