தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், மதுரை மாவட்டம், யா.கொடிக்குளம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தினை தானமாக வழங்கிய உ.ஆயி அம்மாள் என்கிற பூரணம் தன்னலமற்ற கொடை உள்ளத்தை பாராட்டி அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதினை வழங்கி சிறப்பித்தார். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்கொத்து வழங்கி வரவேற்றார். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளார்
சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவிற்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முப்படைகளின் உயர் அலுவலர்கள், தமிழ்நாடு காவல்துறை உயர் அலுவலர்கள் ஆகியோரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். உடன் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.1.2024) மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில் 66.80 ஏக்கர் நிலப்பரப்பில், 77.683 சதுரஅடி பரப்பளவில் 62.78 கோடி ரூபாய் செலவில் உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கமான கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்து, ஏறுதழுவுதல் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

இவ்விழாவில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.1.2024) மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில் உலகத்தரத்துடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு விழாவில், அரங்கத்தில் நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்

இவ்விழாவில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.1.2024) மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில் 66.80 ஏக்கர் நிலப்பரப்பில், 77,683 சதுரஅடி பரப்பளவில் 62.78 கோடி ரூபாய் செலவில் உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கமான கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்தார்

இவ்விழாவில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
‘சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் நிரந்தரமாக வழங்கப்படும்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சிறுபான்மையினர் நலன் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம்

முதலமைச்சர் உடனான கூட்டத்தில் கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள் மற்றும் போதகரர்களுடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், முத்துசாமி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு. சிறுபான்மையினர் நலனில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்படுகிறது. கிறிஸ்துவர்களாக மாறிய ஆதிதிராவிட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” நிறைவு விழாவில்

பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நிறுவனங்களின் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில், இங்கிலாந்து நாட்டு இணை அமைச்சர் லார்டு தாரிக் அகமது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, அமைச்சர் பெருபக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மினா, தொழில், முதலீட்டு […]